நல்லகண்ணுவின் உடல்நிலையில் பின்னடைவு: இந்திய கம்யூ. மாநில செயலாளர் வீரபாண்டியன்முதல்வர் மு.க. ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் புதிய தொழில் முதலீடுகளுக்கு ஒப்புதல் நாளை (பிப். 24) நல்ல முடிவை அறிவிப்பேன் : சசிகலாதொகுதிப் பங்கீடு: கனிமொழி - கிரிஷ் சோடங்கர் சந்திப்பு!தமிழ்நாட்டின் மொத்த வாக்காளர்கள் 5.67 கோடிஇபிஎஸ் உறக்கத்தை கெடுத்த திமுகவின் சர்ஜிகல் ஸ்ட்ரைக்! முதல்வர் ஸ்டாலின்
/

அஞ்சலை அம்மாள் சிலைக்கு விஜய் மரியாதை

சென்னை பனையூரில் உள்ள தவெக அலுவலகத்தில் அஞ்சலை அம்மாள் சிலைக்கு தவெக தலைவர் விஜய் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

News image
தவெக தலைவர் விஜய்.
Updated On :1 ஜூன் 2025, 9:55 am

DIN

சென்னை பனையூரில் உள்ள தவெக அலுவலகத்தில் அஞ்சலை அம்மாள் சிலைக்கு தவெக தலைவர் விஜய் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

இதுகுறித்து விஜய் வெளியிட்ட எக்ஸ் தளப் பதிவில், இந்த மண்ணை நேசித்து, இந்த மண்ணின் மக்களுக்காக உழைத்து, தமது வாழ்நாள் முழுவதும் அஞ்சாமையுடன் மக்கள் சேவையாற்றியவர், மக்கள் சேவகர் அஞ்சலை அம்மாள் அவர்கள்.

விடுதலைப் போராட்டக் களத்தில் அவரது போர்க்குணம் போற்றுதலுக்கு உரியது.

கட்சியின் கொள்கைத் தலைவர்களில் ஒருவரான மக்கள் சேவகர் அஞ்சலை அம்மாளின் பிறந்த நாளையொட்டி, பனையூரில் உள்ள கழகத் தலைமை நிலையச் செயலகத்தில், அவரது திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினேன். இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

விடுதலைப் போராட்டத்துக்காக தனது குடும்பச் சொத்துகளையும், குடியிருந்த வீட்டையும் விற்று, நாட்டுக்காகத் தியாகம் செய்தவா் அஞ்சலை அம்மாள்.

தென்னாட்டின் ஜான்சி ராணி என்று மகாத்மா காந்தியடிகளால் அழைக்கப்பட்ட அவா், மூன்று முறை சட்டப் பேரவை உறுப்பினராகவும் தோ்ந்தெடுக்கப்பட்டு மக்கள் பணியாற்றியவா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.