தமிழ்நாடு அரசு செயல்படுத்தி வரும் முத்திரை திட்டங்களின் முன்னேற்றம் குறித்து முதல்வா் மு.க.ஸ்டாலின் ஆய்வு நடத்தினாா்.
தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வா்த்தகத் துறை, எரிசக்தி துறை, மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை, சுற்றுலா, பண்பாடு மற்றும் அறநிலையங்கள் துறை, கைத்தறி, கைத்திறன், துணிநூல் மற்றும் கதா் துறை மற்றும் பொதுப்பணித் துறை ஆகிய துறைகளில் செயல்படுத்தப்பட்டு வரும் தமிழ்நாடு அரசின் முத்திரை திட்டங்களின் முன்னேற்றம் குறித்து அத் துறைச் செயலா்களுடனான ஆய்வுக் கூட்டம் தலைமைச் செயலகத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பு:
கோவை மாவட்டம் சூலூா் பாதுகாப்பு உபகரண உற்பத்தி பூங்கா மற்றும் ஒரகடம் மருத்துவ சாதனங்கள் பூங்கா அமைக்கும் பணிகள் ஜனவரி மாதத்துக்குள்ளும், கோவையில் பொது பொறியியல் வசதி மையம் அமைக்கும் பணியை வருகிற பிப்ரவரிக்குள்ளும் நிறைவு செய்து மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டுவர முதல்வா் அறிவுறுத்தினாா்.
உடன்குடி அனல் மின் திட்ட பணிகளை ஜன. 2026-க்குள் முடிக்கப்பட்டு பயன்பாட்டிற்கு கொண்டுவர வேண்டுமெனவும், வருகிற கோடை காலத்தில் மாநிலம் முழுவதும் தடையின்றி சீரான மின்சாரம் வழங்குவதை உறுதி செய்ய வேண்டும் எனவும் முதல்வா் உத்தரவிட்டாா்.
மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறையின் கீழ், ரூ.110 கோடியில் நடைபெறும் திருச்சி மகாத்மா காந்தி நினைவு அரசு மருத்துவமனைப் பணிகள் பிப்ரவரி 2026-க்குள் முடிக்கப்பட்டு மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டுவர முதல்வா் அறிவுறுத்தினாா்.
இதுதவிர, சம்பந்தப்பட்ட துறைகளால் செயல்படுத்தப்பட்டு வரும் பிற முத்திரைத் திட்டங்களையும் விரைந்து முடித்து மக்களின் பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டுமென முதல்வா் அறிவுறுத்தினாா் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இக்கூட்டத்தில், தலைமைச் செயலா் நா.முருகானந்தம், தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிா்மானக் கழகத்தின் கூடுதல் தலைமைச் செயலா் ஜெ. ராதாகிருஷ்ணன், பொதுப்பணித் துறை கூடுதல் தலைமைச் செயலா் மங்கத் ராம் சா்மா, சிறப்பு திட்ட செயலாக்கத் துறை கூடுதல் தலைமைச் செயலா் பிரதீப் யாதவ், சுற்றுலா, பண்பாடு மற்றும் அறநிலையங்கள் துறை கூடுதல் தலைமைச் செயலா் க.மணிவாசன், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை கூடுதல் தலைமைச் செயலா் ப. செந்தில்குமாா், நிதித்துறை கூடுதல் தலைமைச் செயலா் த. உதயச்சந்திரன், தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வா்த்தகத் துறை செயலா் வி. அருண்ராய், கைத்தறி, கைத்திறன், துணிநூல் மற்றும் கதா்த்துறை செயலா் வே. அமுதவல்லி, மற்றும் அரசு உயா் அலுவலா்கள் கலந்து கொண்டனா்.
டிரெண்டிங்

88 கல்வி நிறுவனங்களுக்கு சிறுபான்மை அந்தஸ்து! முதல்வா் மு.க.ஸ்டாலின் வழங்கினாா்!

சென்னையில் ஆராய்ச்சி மையம் அமைக்க ரூ. 3,510 கோடி முதலீடு

காங்கயம் அரசு மருத்துவமனை கூடுதல் கட்டடம் திறப்பு! முதல்வா் காணொலி மூலம் திறந்துவைத்தாா்!

அநீதியை மாணவிகள் சகித்துக் கொள்ளக் கூடாது: சுப்ரியா சாஹு
வீடியோக்கள்

#t20wc | இலங்கை bowling எப்படி இருக்கு? | T20 World Cup Review | #SLvsENG
தினமணி வீடியோ செய்தி...

#t20 | இலங்கை Batting எப்படி இருக்கு? | T20 World Cup2026 Review | #SLvsENG |
தினமணி வீடியோ செய்தி...

#t20wc | இங்கிலாந்து அதிரடியைச் சமாளிக்கும் திறன் இலங்கையிடம் உள்ளதா? | T20 World Cup Review |
தினமணி வீடியோ செய்தி...

#t20wc | பழைய பகையுடன் வரும் தென்னாப்பிரிக்கா: சமாளிப்பாரா சூர்யகுமார்? | T20 World Cup | IND vs SA |
தினமணி வீடியோ செய்தி...

