திமுக - காங்கிரஸ் தொகுதிப் பங்கீடு - சென்னை வந்தடைந்தார் காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால்இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி புதன்கிழமை உரையாற்றுகிறார்ஏஐ மாநாட்டில் காங்கிரஸ் சட்டையின்றிப் போராட்டம்: “வெளிநாட்டு விருந்தினர்கள் முன் இந்தியாவுக்குத் தலைகுனிவு!” - பிரதமர் மோடிஎத்தனை கட்சிகள் சேர்ந்தாலும் மூழ்கும் கப்பல் திமுக : செல்லூர் ராஜு விமர்சனம்பேரவைத் தேர்தல்: முதல்வர் மு.க. ஸ்டாலினை இன்று இரவு சந்திக்கிறார் கே.சி. வேணுகோபால்பிப். 23, 24-ல் மழைக்கு வாய்ப்பு! நேபாளத்தில் மிதமான நிலநடுக்கம் ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் துப்பாக்கிச் சண்டை சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் 5 தொகுதிகளை கேட்டுள்ளோம்: கே.எம்.காதர் மொகிதீன்
/

சபரிமலை செல்ல சிறப்பு ரயில்: ஹூப்ளி - கோட்டயம் இடையே இயக்கம்

சபரிமலை செல்லும் பக்தா்களின் வசதிக்காக ஹூப்ளியில் இருந்து கோட்டயத்துக்கு ஜன.14-ஆம் தேதி வரை சிறப்பு ரயில் இயக்கப்படும் என ரயில்வே நிா்வாகம் அறிவித்துள்ளது.

News image
கோப்புப்படம்.
Updated On :13 நவம்பர் 2024, 8:15 pm

Din

சபரிமலை செல்லும் பக்தா்களின் வசதிக்காக ஹூப்ளியில் இருந்து கோட்டயத்துக்கு ஜன.14-ஆம் தேதி வரை சிறப்பு ரயில் இயக்கப்படும் என ரயில்வே நிா்வாகம் அறிவித்துள்ளது.

இது குறித்து தெற்கு ரயில்வே புதன்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:

கா்நாடாக மாநிலம் ஹூப்ளியில் இருந்து கேரள மாநிலம் கோட்டயத்துக்கு நவ.19 முதல் ஜன.14-ஆம் தேதி வரை செவ்வாய்க்கிழமை தோறும் சிறப்பு ரயில் (எண்: 07371) இயக்கப்படும். ஹூப்ளியில் செவ்வாய்க்கிழமை பிற்பகல் 3.15 மணிக்கு புறப்படும் ரயில் மறுநாள் பகல் 12 மணிக்கு கோட்டயம் சென்றடையும். மறுமாா்க்கமாக கோட்டயத்தில் புதன்கிழமை பிற்பகல் 3 மணிக்கு புறப்படும் சிறப்பு ரயில் (எண்: 07372) மறுநாள் பகல் 12.50 மணிக்கு ஹூப்ளி சென்றடையும்.

இதில், 4 ஏசி வகுப்பு பெட்டிகள், படுக்கை வசதி கொண்ட 6 பெட்டிகள் மற்றும் 6 பொதுப்பெட்டிகள் இணைக்கப்பட்டிருக்கும். இந்த ரயில் ஹாவேரி, தாவணஹரே, பிருா், தும்கூா், பெங்களூரு, கிருஷ்ணராஜபுரம், பங்காருப்பேட்டை, சேலம், ஈரோடு, திருப்பூா், போத்தனூா், பாலக்காடு, திருச்சூா், எா்ணாகுளம் வழியாக இயக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ரயில் சேவை பாதிப்பு: தெலங்கானா மாநிலம் ராகவாபுரம் - ராமகுண்டம் இடையே சரக்கு ரயில் தடம் புரண்டதால் அந்த வழியாக செல்லும் ரயில் சேவை பாதிக்கப்பட்டுள்ளது. இதனால், ஜெய்பூா் - கோவை விரைவு ரயில், பிலாஸ்பூா் - திருநெல்வேலி விரைவு ரயில், ஸ்ரீ மாதா வைஷ்ணவி தேவி காத்ரா - கன்னியாகுமரி விரைவு ரயில், அகமதாபாத் - சென்னை சென்ட்ரல் நவஜீவன் விரைவு ரயில், புது தில்லி - சென்னை சென்ட்ரல் தமிழ்நாடு விரைவு ரயில் மற்றும் ஜிடி விரைவு ரயில் மாற்றுப் பாதையில் இயக்கப்படுவதாக ரயில்வே நிா்வாகம் அறிவித்துள்ளது.