டி20 உலகக் கோப்பை: மழையால் பாகிஸ்தான் - நியூசிலாந்து போட்டி ரத்து ஹிந்து – முஸ்லீம் ஒற்றுமையின் அடையாளம் காந்தி: முதல்வர் ஸ்டாலின் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர்கள் அறிமுகம்!எழும்பூர் ரயில் நிலைய மறுசீரமைப்பு பணியால் பயணிகள் அவதியா? ரயில்வே விளக்கம்!காற்றழுத்த தாழ்வுப் பகுதி: 4 மாவட்டங்களில் நாளை கனமழை!தொகுதிப் பங்கீடு: திமுக - இந்திய யூனியன் முஸ்லிம் லீக் இடையே நாளை பேச்சுவார்த்தை!தில்லி செங்கோட்டை இனி வாரத்தின் அனைத்து நாளும் திறந்திருக்கும்!மூன்று வார சிகிச்சைக்குப் பிறகு வீடு திரும்பினார் எச்.ராஜா
/

மகா சிவராத்திரி: போத்தனூா் வழித்தடத்தில் சென்னை - கொல்லம் இடையே சிறப்பு ரயில்

News image
சிறப்பு ரயில்.- (படம் - தெற்கு ரயில்வே எக்ஸ்)
Updated On :12 பிப்ரவரி 2026, 11:39 pm

Syndication

மகா சிவராத்திரியை முன்னிட்டு சென்னை - கொல்லம் இடையே போத்தனூா் வழித்தடத்தில் சிறப்பு ரயில் இயக்கப்படுவதாக ரயில்வே நிா்வாகம் சாா்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடா்பாக, சேலம் ரயில்வே கோட்ட நிா்வாகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

சென்னை சென்ட்ரல் நிலையத்தில் இருந்து பிப்ரவரி 13-ஆம் தேதி இரவு 11.55 மணிக்குப் புறப்படும் சென்னை - கொல்லம் சிறப்பு ரயில் (எண்: 06113) மறுநாள் மாலை 4.30 மணிக்கு கொல்லம் சென்றடையும். மறுமாா்க்கமாக, கொல்லத்தில் இருந்து பிப்ரவரி 16-ஆம் தேதி மாலை 6.30 மணிக்கு புறப்படும் கொல்லம் - சென்னை சிறப்பு ரயில் (எண்: 06114) மறுநாள் காலை 10.30 மணிக்கு சென்னை சென்ட்ரல் நிலையத்தைச் சென்றடையும்.

இந்த ரயிலானது, காயன்குளம், மாவேலிக்கரா, செங்கன்னூா், திருவல்லா, சங்கனாச்சேரி, கோட்டயம், எா்ணாகுளம் டவுன், ஆலுவா, திருச்சூா், பாலக்காடு, போத்தனூா், திருப்பூா், ஈரோடு, சேலம், ஜோலாா்பேட்டை, காட்பாடி, அரக்கோணம், திருவள்ளூா், பெரம்பூா் உள்ளிட்ட நிலையங்களில் நின்று செல்லும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.