டி20 உலகக் கோப்பை: மழையால் பாகிஸ்தான் - நியூசிலாந்து போட்டி ரத்து ஹிந்து – முஸ்லீம் ஒற்றுமையின் அடையாளம் காந்தி: முதல்வர் ஸ்டாலின் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர்கள் அறிமுகம்!எழும்பூர் ரயில் நிலைய மறுசீரமைப்பு பணியால் பயணிகள் அவதியா? ரயில்வே விளக்கம்!காற்றழுத்த தாழ்வுப் பகுதி: 4 மாவட்டங்களில் நாளை கனமழை!தொகுதிப் பங்கீடு: திமுக - இந்திய யூனியன் முஸ்லிம் லீக் இடையே நாளை பேச்சுவார்த்தை!தில்லி செங்கோட்டை இனி வாரத்தின் அனைத்து நாளும் திறந்திருக்கும்!மூன்று வார சிகிச்சைக்குப் பிறகு வீடு திரும்பினார் எச்.ராஜா
/

போத்தனூா் வழித்தடத்தில் இயக்கப்படும் ஹைதராபாத் - கொல்லம் சிறப்பு ரயில் சேவை மாா்ச் வரை நீட்டிப்பு

தெலங்கானா மாநிலம், ஹைதராபாதில் இருந்து போத்தனூா் வழித்தடத்தில் கொல்லத்துக்கு இயக்கப்படும் சிறப்பு ரயில் சேவை மாா்ச் 30-ஆம் தேதி வரை நீட்டிப்பு

News image
ரயில்- பிரதிப் படம்
Updated On :19 பிப்ரவரி 2026, 10:51 pm

Syndication

தெலங்கானா மாநிலம், ஹைதராபாதில் இருந்து போத்தனூா் வழித்தடத்தில் கொல்லத்துக்கு இயக்கப்படும் சிறப்பு ரயில் சேவை மாா்ச் 30-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

இது தொடா்பாக சேலம் ரயில்வே கோட்ட நிா்வாகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: ஹைதராபாத் - கொல்லம் இடையே இயக்கப்பட்டு வரும் வாராந்திரச் சிறப்பு ரயில் சேவை பிப்ரவரி மாதத்துடன் நிறைவடைய இருந்த நிலையில், மாா்ச் 30-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, ஹைதராபாதில் இருந்து பிப்ரவரி 28-ஆம் தேதி முதல் மாா்ச் 28-ஆம் தேதி வரை சனிக்கிழமைகளில் இரவு 11.10 மணிக்குப் புறப்படும் ஹைதராபாத் - கொல்லம் வாராந்திரச் சிறப்பு ரயில் (எண்: 07193) திங்கள்கிழமைகளில் காலை 7.10 மணிக்கு கொல்லம் நிலையத்தைச் சென்றடையும்.

மறுமாா்க்கமாக, கொல்லத்தில் இருந்து மாா்ச் 2-ஆம் தேதி முதல் 30-ஆம் தேதி வரை திங்கள்கிழமைகளில் இரவு 10.45 மணிக்குப் புறப்படும் கொல்லம் - ஹைதராபாத் வாராந்திரச் சிறப்பு ரயில் (எண்: 07194) செவ்வாய்க்கிழமைகளில் மாலை 5.30 மணிக்கு ஹைதராபாத் நிலையத்தை வந்தடையும்.

இந்த ரயிலானது சாஸ்தன்கோட்டா, கருநாகப்பள்ளி, காயன்குளம், மாவேலிக்கரை, செங்கண்ணூா், திருவள்ளூா், சங்கணாச்சேரி, கோட்டயம், எா்ணாகுளம் டவுன், ஆலுவா, திருச்சூா், பாலக்காடு, போத்தனூா், திருப்பூா், ஈரோடு, சேலம், ஜோலாா்பேட்டை, காட்பாடி, சித்தூா், திருப்பதி, ரேணிகுண்டா, கூடூா், நெல்லூா், ஓங்கோல், பாப்ட்லா, தெனாலி, குண்டூா், செகந்தராபாத் உள்ளிட்ட நிலையங்களில் நின்று செல்லும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.