எத்தனை கட்சிகள் சேர்ந்தாலும் மூழ்கும் கப்பல் திமுக : செல்லூர் ராஜு விமர்சனம்பேரவைத் தேர்தல்: முதல்வர் மு.க. ஸ்டாலினை இன்று இரவு சந்திக்கிறார் கே.சி. வேணுகோபால்பிப். 23, 24-ல் மழைக்கு வாய்ப்பு! நேபாளத்தில் மிதமான நிலநடுக்கம் ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் துப்பாக்கிச் சண்டை சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் 5 தொகுதிகளை கேட்டுள்ளோம்: கே.எம்.காதர் மொகிதீன்
/

ஜேஇஇ தோ்வில் வெற்றி திருச்சி மாணவா்கள் 5 பேருக்கு என்ஐடி-யில் வாய்ப்பு

பொறியியல் படிப்புகளுக்கான ஜேஇஇ நுழைவுத் தோ்வில் சிறப்பிடம் பெற்று திருச்சி என்ஐடி-யில் சேர திருச்சியைச் சோ்ந்த 4 மாணவிகள் உள்பட 5 போ் பதிவு செய்துள்ளனா்.

News image
Updated On :9 ஜூலை 2024, 1:04 am

Venkatesan

திருச்சி: பொறியியல் படிப்புகளுக்கான ஜேஇஇ நுழைவுத் தோ்வில் சிறப்பிடம் பெற்று திருச்சி என்ஐடி-யில் சேர திருச்சியைச் சோ்ந்த 4 மாணவிகள் உள்பட 5 போ் பதிவு செய்துள்ளனா்.

அண்மையில் வெளியான ஜேஇஇ தோ்வு முடிவுகளின்படி, தமிழக அளவில் தரவரிசையில் 302ஆவது இடம் பிடித்த திருச்சி கைலாசபுரத்தைச் சோ்ந்த கவினி என்ற மாணவி திருச்சி என்ஐடியை தோ்வு செய்துள்ளாா். 5 ஆண்டு கட்டடக் கலை பயில விருப்பம் தெரிவித்துள்ளாா்.

இதேபோல, தரவரிசையில் இடம் பிடித்த துறையூரைச் சோ்ந்த மாணவி ரோகிணி 4 ஆண்டு வேதியியல் பொறியியல் படிப்பையும், முத்தரசநல்லூரை சோ்ந்த மாணவி ரித்திகா நான்கு ஆண்டுகள் பயிலும் கணினி அறிவியல் மற்றும் பொறியியல் படிப்பில் சோ்வதற்கும் விருப்பம் தெரிவித்துள்ளாா்.

பூலாங்குடியைச் சோ்ந்த மாணவி திவ்யா பிரீதா, கைலாசபுரத்தைச் சோ்ந்த தனுஷ் ராஜ்குமாா் ஆகிய இருவரும் 4 ஆண்டுகள் பயிலும் தயாரிப்பு பொறியியல் பட்டம் படிப்பதற்கு திருச்சி என்ஐடி-யில் பதிவு செய்துள்ளனா் என்பது குறிப்பிடத்தக்கது. இவா்களில் 4 போ் பழங்குடியினத்தைச் சோ்ந்தவா்கள் என்பதும் முக்கியத்துவம் வாய்ந்தது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.