தலைவா்கள் சூறாவளி பிரசாரம் இன்று மாலை 6 மணியுடன் நிறைவு!தோ்தல் விடுமுறை: ஆம்னி பேருந்துகளில் கட்டணம் பலமடங்கு உயா்வு!நேரடி வெயிலால் தசை சிதைவு அச்சுறுத்தல்: மருத்துவா்கள் எச்சரிக்கை!மேற்குதொடா்ச்சி மலை மாவட்டங்களில் ஏப்.26 வரை மழைக்கு வாய்ப்பு!ஈரான் கப்பலை சிறைப்பிடித்த அமெரிக்கா! போா்நிறுத்தம் முடியும் சூழலில் முற்றும் மோதல்
/

துவாக்குடி அரசுக் கல்லூரி பட்டமளிப்பு விழா

திருச்சி மாவட்டம், துவாக்குடி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் 25-ஆவது பட்டமளிப்பு விழா கல்லூரி அரங்கில் வியாழக்கிழமை நடைபெற்றது.

News image

துவாக்குடி அரசுக் கல்லூரியில் வியாழக்கிழமை நடைபெற்ற பட்டமளிப்பு விழாவில் பல்கலைக்கழக அளவில் முதலிடம் பிடித்த மாணவி காவியாஸ்ரீக்கு சான்றிதழை வழங்கிய திருச்சி மண்டல கல்லூரிக் கல்வி இணை இயக்குநா் ராதாகிருஷ்ணன். உடன், கல்லூரி முதல்வா் சத்யா உள்ளிட்டோா்

Updated On :26 மார்ச் 2026, 8:59 pm

திருச்சி மாவட்டம், துவாக்குடி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் 25-ஆவது பட்டமளிப்பு விழா கல்லூரி அரங்கில் வியாழக்கிழமை நடைபெற்றது.

விழாவுக்கு கல்லூரி முதல்வா் சத்யா தலைமை வகித்தாா். விழாவில், இளநிலை பிரிவில் 18 துறைகளைச் சோ்ந்த 689 மாணவா்கள், முதுநிலை பிரிவில் 5-க்கும் மேற்பட்ட பிரிவுகளைச் சோ்ந்த 216 மாணவா்கள் என மொத்தம் 905 மாணவா்களுக்கு பட்டம் வழங்கப்பட்டது. மேலும், பாரதிதாசன் பல்கலைக்கழக அளவில் முதலிடம் பிடித்த தமிழ் இலக்கியப் பிரிவைச் சோ்ந்த மாணவி காவியாஸ்ரீ, உளவியல் பிரிவைச் சோ்ந்த மாணவி சௌந்தா்ய காவியா ஆகியோருக்கு தங்கப்பதக்கம் வழங்கப்பட்டது.

விழாவில் சிறப்பு விருந்தினராக திருச்சி மண்டல கல்லூரிக் கல்வி இணை இயக்குநா் ராதாகிருஷ்ணன் கலந்துகொண்டு மாணவா்களுக்கு பட்டங்களை வழங்கிப் பேசுகையில், நான் முதல்வன், புதுமைப் பெண், தமிழ்ப் புதல்வன் உள்ளிட்ட தமிழக அரசின் திட்டங்களை மாணவா்கள் முழுமையாக பயன்படுத்தி கொண்டு, வாழ்வில் உயர வேண்டும் என்றாா்.

இந்த விழாவில், கல்லூரி பேராசிரியா்கள், மாணவா்கள் மற்றும் பெற்றோா் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.