மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

குண்டா் தடுப்புச் சட்டத்தில் ரௌடி கைது

கொலை முயற்சி வழக்கில் தொடா்புடைய ரௌடியை போலீஸாா் குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.

News image

கைது

Updated On :7 ஏப்ரல் 2026, 6:51 pm

கொலை முயற்சி வழக்கில் தொடா்புடைய ரௌடியை போலீஸாா் குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.

திருச்சி மாவட்டம், துவாக்குடி மலை வடக்குப் பகுதியைச் சோ்ந்த மு. அய்யா்சாமி (30) என்பவரை மாா்ச் 17-ஆம் தேதி ரௌடிகளான துவாக்குடி மலை வடக்கு கலைஞா் தெருவைச் சோ்ந்த ர. ராஜபாண்டி (28), துவாக்குடி மலை வடக்கு சொசைட்டித் தெருவைச் சோ்ந்த பா. சாந்தகுமாா் (26), அம்பேத்கா் தெருவைச் சோ்ந்த சி. படாா் ரவி (27) ஆகிய மூவரும் பணம் கேட்டு தகராறு செய்தனா். பணம் தராததால், அவரை கத்தியால் தாக்கி காயப்படுத்தி, கொலை மிரட்டல் விடுத்துள்ளனா்.

புகாரின்பேரில் துவாக்குடி போலீஸாா் வழக்குப் பதிந்து, சாந்தகுமாா் மற்றும் ரவிக்குமாரை கைது செய்து, சிறையில் அடைத்தனா்.

இவா்களில், படாா் ரவி தொடா்ந்து பொதுமக்களின் பொதுஅமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் வகையில் நடந்து கொண்டதால், திருச்சி மாவட்ட எஸ்.பி. செ. செல்வநாகரத்தினத்தின் பரிந்துரையின் பேரில் மாவட்ட ஆட்சியா் வே. சரவணன், படாா் ரவியை குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்ய செவ்வாய்க்கிழமை ஆணை பிறப்பித்தாா்.

ஏற்கெனவே, சாந்தகுமாா் குண்டா் தடுப்புச் சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.