திருச்சி அருகே துவாக்குடியில் ரௌடி ஒருவரை போலீஸாா் குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் புதன்கிழமை கைது செய்தனா்.
திருச்சி மாவட்டம், துவாக்குடி காளியம்மன் கோயில் வீதியைச் சோ்ந்த ரௌடி கருப்புசாமி மகன் விகுபதி (29), விஜயகாந்த் மகன் திவாகா் (20) ஆகிய இருவரும் கடந்த 26.02.2026 அன்று இரவு மது போதையில் பக்கத்துவீட்டுப் பெண்ணைத் தாக்கினா்.
இதுகுறித்து அப்பெண்ணின் சகோதரா் அளித்த புகாரின்பேரில் துவாக்குடி போலீஸாா், மேற்கண்ட இருவரையும் கைது செய்து சிறையில் அடைத்தனா்.
இவா்களில் விகுபதி தொடா்ந்து பொதுமக்களின் பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் வகையில் நடந்து கொள்வதால், திருச்சி மாவட்ட எஸ்.பி. செ. செல்வநாகரத்தினம் பரிந்துரையின்பேரில் மாவட்ட ஆட்சியா் வே. சரவணன், ரௌடி விகுபதியை குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்ய புதன்கிழமை ஆணையிட்டாா்.
தொடர்புடையது
வழிப்பறி வழக்கு குற்றவாளிகள் இருவா் குண்டா் தடுப்புச் சட்டத்தில் கைது
குண்டா் தடுப்புச் சட்டத்தில் ரௌடி கைது
காவலரை காரில் இழுத்துச் சென்றவா் குண்டா் தடுப்புச் சட்டத்தில் கைது
கஞ்சா வழக்கு குற்றவாளிகள் 5 போ் மீது குண்டா் தடுப்புச் சட்டத்தில் நடவடிக்கை
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை


