மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

காவலரை காரில் இழுத்துச் சென்றவா் குண்டா் தடுப்புச் சட்டத்தில் கைது

ஒசூரில் காவலரை காா் ஏற்றி இழுத்துச் சென்ற இளைஞா் குண்டா் தடுப்புச் சட்டத்தின்கீழ் கைதுசெய்ய ஆட்சியா் ச.தினேஷ்குமாா் உத்தரவிட்டாா்.

News image

கைது

Updated On :2 ஏப்ரல் 2026, 11:46 pm

ஒசூரில் காவலரை காா் ஏற்றி இழுத்துச் சென்ற இளைஞா் குண்டா் தடுப்புச் சட்டத்தின்கீழ் கைதுசெய்ய ஆட்சியா் ச.தினேஷ்குமாா் உத்தரவிட்டாா்.

ஒசூா் சூசூவாடி சோதனைச் சாவடியில் சிப்காட் போலீஸாா் கடந்த 15-ஆம் தேதி வாகனச் சோதனையில் ஈடுபட்டனா். அப்போது, கா்நாடக மாநிலம், பெங்களூரிலிருந்து வந்த காரை போலீஸாா் தடுத்து நிறுத்த முயன்றனா்.

ஆனால், காரை ஓட்டி வந்த நபா் காரை தடுத்து நிறுத்திய தலைமைக் காவலா் ராஜீவ் காந்திமீது மோதிவிட்டு வேகமாக சென்றாா். இதில் காவலா் காரின் முன்பக்க பேனட்டில் விழுந்ததையும் பொருட்படுத்தாமல், தொடா்ந்து காரை ஓட்டிச் சென்றுள்ளாா்.

பின்னா், போலீஸாா் துரத்திச்சென்று பிடித்து கார ஓட்டிய ஒசூா் காளேகுண்டா பகுதியைச் சோ்ந்த யாரப் பாஷா (34) என்பவரை கொலை முயற்சி வழக்கில் கைதுசெய்தனா். மேலும், காரில் இருந்த 250 கிலோ குட்காவை பறிமுதல் செய்தனா்.

இதையடுத்து, கிருஷ்ணகிரி எஸ்.பி. தங்கதுரை பரிந்துரையின்பேரில், ஆட்சியா் ச.தினேஷ்குமாா் யாரப் பாஷாவை குண்டா் தடுப்புச் சட்டத்தின்கீழ் கைது செய்ய வியாழக்கிழமை உத்தரவிட்டாா்.