நல்லகண்ணு உடலுக்கு முழு அரசு மரியாதை! முதல்வர் அறிவிப்பு!தியாகப் பெருஞ்சீலர்! நல்லகண்ணுவுக்கு முதல்வர் ஸ்டாலின் புகழஞ்சலி! நல்லகண்ணு உடல் தானம்! கம்யூனிஸ்ட் தலைவர் நல்லகண்ணு காலமானார்!கூட்டணிக்கு தவெக தயார்! காங்கிரஸ் மேலிடப் பொறுப்பாளர்வகைவகையாக வடை சுடும் இபிஎஸ்: முதல்வர் ஸ்டாலின்காஸா இனப் படுகொலையை பிரதமர் மோடி பேச வேண்டும்: காங்கிரஸ்சூரிய சக்தி மின்தகடு இறக்குமதி! இந்தியா மீது அமெரிக்கா 126% வரி?இந்தியா கூட்டணியை உருவாக்கிய முதல்வர் ஸ்டாலினுக்கு பாராட்டு: காங்கிரஸ்மேலும் 2 தகவல் ஆணையா்கள் நியமனம்இன்று தென், வட தமிழகத்தின் ஒருசில இடங்களில் மழைக்கு வாய்ப்புஜேஇஇ 2-ஆம் கட்ட முதன்மைத் தோ்வு: விண்ணப்பிக்க இன்று கடைசிஇந்திய தலைமைத் தோ்தல் ஆணையா் நாளை தமிழகம் வருகை
/

உழவர் சந்தைகளில் தொன்மை சார் உணவகம்: தமிழக அரசு அரசாணை வெளியீடு!

தமிழ்நாட்டின் 25 உழவர் சந்தைகளில் தொன்மை சார் உணவகம் அமைக்க தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. 

News image
Updated On :6 பிப்ரவரி 2024, 12:57 pm

DIN


சென்னை: தமிழ்நாட்டின் 25 உழவர் சந்தைகளில் தொன்மை சார் உணவகம் அமைக்க தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. 

தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள அரசாணையில், தமிழ்நாடு சட்டப்பேரவையில் 2023-24 ஆம் நிதியாண்டுக்கான வேளாண் நிதிநிலை அறிக்கை கடந்த மார்ச் 21 ஆம் தேதி தாக்கல் செய்யப்பட்டது. அத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் தாக்கல் செய்தார். நிதிநிலை அறிக்கையில் 25 உழவர் சந்தைகளில் தொன்மை சார் உணவகங்கள் தனியார் பங்களிப்புடன் உருவாக்கப்படும் என்று அறிவிப்பை வெளியிட்டிருந்தார்.

இந்நிலையில், தமிழ்நாட்டில் 25 உழவர் சந்தையில் தனியார் பங்களிப்புடன் தொன்மை சார் உணவகங்கள் அமைக்க தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. 

அதன்படி, சிறுதானிய கூழ் வகைகள், மூலிகை சூப் வகைகளுடன் கூடிய பாரம்பரிய உணவுகள் குறித்த விழிப்புணர்வை நுகர்வோரிடம் ஏற்படுத்திட தொன்மை சார்ந்த உணவகங்கள் அமைக்க அரசாணை வெளியிட்டுள்ளது. 

மேலும், சிறு தானிய உணவு வகைகள் மற்றும் புவிசார் குறியீடு பெற்ற உணவுகள் மட்டுமே விற்பனை செய்ய வேண்டும்.

இந்த திட்டத்தின் முதற்கட்டமாக, தமிழ்நாட்டில் கோயம்புத்தூர், திண்டுக்கல், ஈரோடு, கன்னியாகுமரி, கள்ளக்குறிச்சி, கிருஷ்ணகிரி, மதுரை, நீலகிரி, பெரம்பலூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம், சேலம், தேனி, திருநெல்வேலி, திருப்பூர், திருச்சி, வேலூர் ஆகிய இடங்களில் இந்த தொன்மை சார் உணவகங்கள் அமைக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. 

உழவர் சந்தையில் அதிகாலை 4 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை மட்டுமே தொன்மை சார் உணவகம் செயல்பட வேண்டும்.

சிறுதானிய உணவகத்திற்கு இலக்கிய நயம் சார்ந்த பெயர் சூட்ட அறிவுறுத்தப்பட்டுள்ளது. பிளாஸ்டிக் பை, டம்பளர் போன்றவற்றை பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.