சுவடிகள் போற்றுதும்-முனைவர் இ.சுந்தரமூர்த்தி; பக்.104; ரூ.125; மணிவாசகர் பதிப்பகம், வண்ணாரப்பேட்டை, சென்னை- 600 021, ✆ 93805 30884.
தமிழ் மொழியின் வரலாறு, பண்பாட்டை பாதுகாத்து, அடுத்த தலைமுறைக்கு தந்த பெருமை சுவடி களையே சாரும். அச்சுக் கலை வரவால் சங்க நூல்கள் சுவடிகளில் இருந்து படி எடுக்கப்பட்டு மக்களிடையே பெரிதும் பரவின.
இந்தப் பணியில் ஆறுமுக நாவலர், சி.வை.தாமோதரம் பிள்ளை, உ.வே.சாமிநாதையர், வையாபுரிப் பிள்ளை ஆகியோர் முன்னோடிகளாகத் திகழ்ந்தனர்.
திருக்குறள் முதல்முதலில் 1812 -இல் அச்சாகியது. சங்க இலக்கியங்களில் திருமுருகாற்றுப்படை (1851) முதலில் அச்சிடப்பட்டது. கலித்தொகை (1887), பத்துப்பாட்டு (1889), புறநானூறு (1894), ஐங்குறுநூறு (1903), முல்லைப்பாட்டு (1903), பதிற்றுப்பத்து (1904), பட்டினப்பாலை (1906), பொருநராற்றுப்படை (1907), குறுந்தொகை (1915), நற்றிணை (1915), பரிபாடல் (1918), அகநானூறு (1918) ஆகியவை முதல்முதலாக சுவடிகளில் இருந்து அச்சுருவம் பெற்றன.
அச்சுருவாக்கச் சூழலை உருவாக்கியவர்கள் வெளிநாட்டு பாதிரியார்களும் அறிஞர்களும் ஆவர். சீகன்பால்கு, வீரமாமுனிவர், பப்ரிசியஸ், சிவார்ட்ஸ் போன்றோர் தமிழிலக்கிய அச்சுருவாக்கத்தில் பெரும்பங்காற்றினர்.
இந்நூலில் இடம் பெற்றுள்ள தொல்காப்பிய முதல் பதிப்பு கட்டுரை, பைந்தமிழ் பதிப்புகளும் மூல பாடத் திறனாய்வும், திருக்குறள் உரையில் பரிமேலழகர் காட்டும் பாடவேறுபாடுகள், தனிக்கட்டுரையாக எழுதப்பட்டுள்ள சுவடிகள் போற்றுதும் கட்டுரை உலகம் முழுவதிலும் உள்ள அறிவுச் செல்வங்கள் முன்னையோரால் எவ்வாறு எழுதப்பட்டு, பாதுகாக்கப் பெற்று வந்துள்ளது என்பதை அறியத்தரும் களஞ்சியங்களாகும்.
செவ்வியல் நூல்களின் முதல் பதிப்புகள் பட்டியல் தரப்பட்டுள்ளது. தொல்காப்பியக் கல்வி இன்றைய அறிவுக்கூறுகள் பலவற்றையும் பெற்று விளங்குவதை நன்கு உணர முடிவதைக் காட்டுகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

வரப்பெற்றோம் (20-04-2026)

வரப்பெற்றோம் (13-04-2026)

வரப்பெற்றோம் (07-04-2026)

வரப்பெற்றோம் (30.03.2026)
வீடியோக்கள்

பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு தொடக்கம்! | #Ajith | #EPS | #Seeman |
தினமணி செய்திச் சேவை

#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | போர்: பண்டியாவின் மும்பையா ருதுராஜின் சென்னையா? | MI vs CSK | MS Dhoni | Rohit Sharma |
தினமணி செய்திச் சேவை

வாக்குச்சாவடிகளை அடையாளம் காண புதிய முயற்சி | TN Election 2026 | Madurai | Polling booth
தினமணி செய்திச் சேவை


