பேரவைத் தோ்தலில் பதிவான வாக்குகள்: அதிகாரபூா்வ விவரம் வெளியாவதில் தாமதம் கேரளம்: புற ஊதா கதிா்வீச்சு அதிகரிப்பு! மக்கள் பாதுகாப்புடன் இருக்க அறிவுறுத்தல்!தலைமைத் தோ்தல் ஆணையரை நீக்கக்கோரி மாநிலங்களவையில் எதிா்க்கட்சிகள் புதிய நோட்டீஸ்டிசம்பரில் இருந்து சுங்கச் சாவடிகளில் இடையூறற்ற சேவை: நிதின் கட்கரி சிபிஎஸ்இ பத்தாம் வகுப்பு இரண்டாம் கட்ட பொதுத் தோ்வு: 6.68 லட்சம் மாணவா்கள் விண்ணப்பம்பேடிஎம் வங்கியின் உரிமத்தை ரத்து செய்தது ஆர்பிஐ!
/

ஆளுநர் ரவி சென்னை திரும்பினார்

தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி தனது தில்லி பயணத்தை முடித்துக் கொண்டு புதன்கிழமை சென்னை திரும்பினார்.  

News image

ஆளுநர் ஆர்.என். ரவி (கோப்புப் படம்)

Updated On :12 ஜூலை 2023, 10:26 pm

தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி தனது தில்லி பயணத்தை முடித்துக் கொண்டு புதன்கிழமை சென்னை திரும்பினார். 
கடந்த ஜூலை 7- ஆம் தேதி இரவு 6 நாள் பயணமாக தில்லி வந்த தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி, தில்லி பயணத்தை ஒரு நாள் முன்னதாகவே முடித்துக் கொண்டு சென்னை திரும்பியுள்ளார்.  முன்னதாக  அவர், ஜூலை 13 -ஆம் தேதி சென்னை திரும்ப திட்டமிட்டிருந்தார். இந்த 5 நாள் பயணத்தில் தமிழக ஆளுநர் தில்லியில் பல்வேறு நிகழ்ச்சியில் பங்கேற்று சந்திப்புகளையும் மேற்கொண்டார். 
மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை கடந்த சனிக்கிழமை சந்தித்த ஆளுநர், மறுநாள் ஞாயிற்றுக்கிழமை மூத்த வழக்குரைஞரும் அட்டர்னி ஜெனரலுமான ஆர். வெங்கட்ரமணியை சந்தித்தார். சுமார் 2 மணி நேரம் தமிழ்நாடு இல்லத்தில் இருவரும் ஆலோசனையில் ஈடுபட்டனர்.  
அமலாக்கப் பிரிவினரால்  கைது செய்யப்பட்டுள்ள தமிழக அமைச்சர் செந்தில் பாலாஜியை நீக்கம் செய்த ஆளுநர், தனது உத்தரவை  நிறுத்திவைத்துள்ள நிலையில் இது போன்ற பல்வேறு விவகாரங்கள் தொடர்பாக ஆளுநர் ஆலோசனைகளை மேற்கொண்டு தற்போது சென்னை திரும்பியுள்ளார்.    
தில்லி வந்த ஆளுநர் ரவி, பிரதமர் மோடியை சந்திக்கவில்லை. அதே சமயத்தில் அடுத்த வாரம் குடியரசுத் தலைவர் மாளிகையில் நடைபெறும் கூட்டத்திற்கு ஆளுநர் மீண்டும் தில்லி வரலாம் எனவும் கூறப்படுகிறது. இந்தச் சமயத்தில் பிரதமரை சந்திக்கலாம் எனவும் தெரிகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.