மாநில தோ்தல் ஆணையா்களுடன் இந்திய தோ்தல் ஆணையம் இன்று ஆலோசனைநல்லகண்ணுவின் உடல்நிலையில் பின்னடைவு: இந்திய கம்யூ. மாநில செயலாளர் வீரபாண்டியன்முதல்வர் மு.க. ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் புதிய தொழில் முதலீடுகளுக்கு ஒப்புதல் நாளை (பிப். 24) நல்ல முடிவை அறிவிப்பேன் : சசிகலாதொகுதிப் பங்கீடு: கனிமொழி - கிரிஷ் சோடங்கர் சந்திப்பு!தமிழ்நாட்டின் மொத்த வாக்காளர்கள் 5.67 கோடிஇபிஎஸ் உறக்கத்தை கெடுத்த திமுகவின் சர்ஜிகல் ஸ்ட்ரைக்! முதல்வர் ஸ்டாலின்
/

முதல்நாளில் சென்னையிலிருந்து 1.34 லட்சம் பேர் சொந்த ஊர் பயணம்!

பொங்கல் திருநாளை முன்னிட்டு, நேற்று முதல் நாளில் சென்னையிலிருந்து 1.34 லட்சம் பேர் சொந்த ஊருக்கு பயணம் மேற்கொண்டனர். 

News image
கோப்புப் படம்
Updated On :1 பிப்ரவரி 2024, 6:42 pm

DIN

பொங்கல் திருநாளை முன்னிட்டு, நேற்று முதல் நாளில் சென்னையிலிருந்து 1.34 லட்சம் பேர் சொந்த ஊருக்கு பயணம் மேற்கொண்டனர். 

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு பொதுமக்கள் சொந்த ஊர் செல்வதற்கு வசதியாக, 16 ஆயிரத்து 932 பேருந்துகள் நேற்று (ஜன. 12) முதல் இயக்கப்படுகின்றன. 

சென்னை, கோவை, திருப்பூர், சேலம் போன்ற தொழில் நகரங்களில் இருந்து தென் மாவட்டங்கள் உள்பட அனைத்து மாவட்டங்களுக்கு ஜன.12 முதல் 14-ஆம் தேதி வரையும், ஜன.16 முதல் 18-ஆம் தேதி வரையும் சிறப்புப் பேருந்துகள் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.

அதன்படி நேற்று முதல் நாளில் சென்னையிலிருந்து 1.34 லட்சம் பேர் சொந்த ஊர் பயணம் மேற்கொண்டுள்ளதாக போக்குவரத்துத் துறை தகவல் தெரிவித்துள்ளது.

நேற்று சென்னையில் இருந்து வழக்கமாக இயக்கப்படும் 2,100 பேருந்துகளுடன் கூடுதலாக 586 பேருந்துகள் என மொத்தம் 2,686 பேருந்துகளில் 1,34,300 பேர் பயணித்துள்ளனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.