டி20 உலக கோப்பையில் இன்று... இந்திய அணியை 76 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி தென்னாப்பிரிக்கா அபாரம்!தயாரிப்பாளர் சங்கத் தேர்தலில் தலைவர் பதவிக்கு போட்டியிட்ட ஜி கே எம் தமிழ்குமரன் வெற்றிஆப்கானிஸ்தானில் பாகிஸ்தான் தாக்குதல்: இந்தியா கண்டனம்!சென்னை: முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால் சந்திப்புபாகிஸ்தானிடமிருந்து போர் விமானங்கள் கொள்முதல்: சோமாலியா பேச்சுவார்த்தை‘ஆபரேசன் த்ரஷி-1’: ஜம்மு - காஷ்மீரில் மேலும் ஒரு பயங்கரவாதியின் உடல் கண்டெடுப்பு! இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி புதன்கிழமை உரையாற்றுகிறார்ஏஐ மாநாட்டில் காங்கிரஸ் சட்டையின்றிப் போராட்டம்: “வெளிநாட்டு விருந்தினர்கள் முன் இந்தியாவுக்குத் தலைகுனிவு!” - பிரதமர் மோடி
/

விசாகப்பட்டினம் - கொல்லம் இடையே சபரிமலை சிறப்பு ரயில் இன்றுமுதல் முன்பதிவு

சபரிமலை சீசனை முன்னிட்டு, விசாகப்பட்டினம் முதல் கொல்லம் வரை இயக்கப்படவுள்ள சிறப்பு ரயிலுக்கு வியாழக்கிழமை (ஜன.12) முதல் முன்பதிவு செய்யலாம் என்று தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.

News image
கோப்புப் படம்
Updated On :1 பிப்ரவரி 2024, 6:41 pm

DIN

சபரிமலை சீசனை முன்னிட்டு, விசாகப்பட்டினம் முதல் கொல்லம் வரை இயக்கப்படவுள்ள சிறப்பு ரயிலுக்கு வியாழக்கிழமை (ஜன.12) முதல் முன்பதிவு செய்யலாம் என்று தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.

இதுகுறித்து தெற்கு ரயில்வே சாா்பில் புதன்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: விசாகப்பட்டினத்தில் ஜன.22-ஆம் தேதி மாலை 3.50 மணிக்கு புறப்படும் சபரிமலை சிறப்பு அதிவிரைவு ரயில் (வண்டி எண்: 08567) மறு நாள் மாலை 6 மணிக்கு கொல்லம் சென்றடையும்.

மறுமாா்க்கமாக கொல்லத்திலிருந்து ஜன.23-ஆம் தேதி இரவு 8.45 மணிக்கு புறப்படும் இந்த ரயில் (வண்டி எண்: 08568) ஜன.25-ஆம் தேதி அதிகாலை 12.20 மணிக்கு விசாகப்பட்டினம் சென்றடையும்.

இந்த ரயில் காட்பாடி, ஜோலாா்பேட்டை, சேலம், ஈரோடு, திருப்பூா், கோவை வழியாக இயக்கப்படும். இதற்கான பயணச்சீட்டு முன்பதிவு வியாழக்கிழமை (ஜன.12) காலை 8 மணி முதல் பெறலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.