டி20 உலக கோப்பையில் இன்று... இந்திய அணியை 76 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி தென்னாப்பிரிக்கா அபாரம்!தயாரிப்பாளர் சங்கத் தேர்தலில் தலைவர் பதவிக்கு போட்டியிட்ட ஜி கே எம் தமிழ்குமரன் வெற்றிஆப்கானிஸ்தானில் பாகிஸ்தான் தாக்குதல்: இந்தியா கண்டனம்!சென்னை: முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால் சந்திப்புபாகிஸ்தானிடமிருந்து போர் விமானங்கள் கொள்முதல்: சோமாலியா பேச்சுவார்த்தை‘ஆபரேசன் த்ரஷி-1’: ஜம்மு - காஷ்மீரில் மேலும் ஒரு பயங்கரவாதியின் உடல் கண்டெடுப்பு! இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி புதன்கிழமை உரையாற்றுகிறார்ஏஐ மாநாட்டில் காங்கிரஸ் சட்டையின்றிப் போராட்டம்: “வெளிநாட்டு விருந்தினர்கள் முன் இந்தியாவுக்குத் தலைகுனிவு!” - பிரதமர் மோடி
/

செகந்திராபாத்-ராமநாதபுரம் சிறப்பு ரயில்: இன்று முதல் முன்பதிவு

செகந்திராபாத் முதல் ராமநாதபுரம் வரை இயக்கப்படவுள்ள சிறப்பு ரயிலுக்கு புதன்கிழமை (ஜன.4) முதல் முன்பதிவு செய்யலாம் எனத் தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.

News image
Updated On :1 பிப்ரவரி 2024, 6:37 pm

DIN

செகந்திராபாத் முதல் ராமநாதபுரம் வரை இயக்கப்படவுள்ள சிறப்பு ரயிலுக்கு புதன்கிழமை (ஜன.4) முதல் முன்பதிவு செய்யலாம் எனத் தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.

இது குறித்து தெற்கு ரயில்வே சாா்பில் செவ்வாய்க்கிழமை வெளியிடப்பட்ட செய்தி: தெலுங்கானா மாநிலம் செகந்திராபாதிலிருந்து புதன்கிழமை தோறும் சிறப்பு ரயில் (வண்டி எண்: 07695) இயக்கப்படவுள்ளன. செகந்திராபாத்திலிருந்து ஜன.4, 11, 18 மற்றும் 25 தேதிகளில் இரவு 9.10 மணிக்கு புறப்படும் ரயில் மறுநாள் இரவு 10.30 மணிக்கு ராமநாதபுரம் சென்றடையும்.

மறுமாா்க்கமாக வெள்ளிக்கிழமை தோறும் ராமநாதபுரத்தில் இருந்து புறப்படும் சிறப்பு ரயில் (வண்டி எண்:07696) ஜன.6, 13, 20 மற்றும் 27 தேதிகளில் இயக்கப்படவுள்ளன.

ராமநாதபுரத்தில் காலை 9.50 மணிக்கு புறப்பட்டு மறுநாள் பகல் 12.50 மணிக்கு செகந்திராபாத் சென்றடையும்.

இந்த ரயில் சென்னை எழும்பூா், செங்கல்பட்டு, விழுப்புரம், திருப்பாதிரிப்புலியூா், சிதம்பரம், சீா்காழி, மயிலாடுத்துறை, திருவாரூா், திருத்துறைப்பூண்டி, அதிரம்பட்டினம், புதுக்கோட்டை, அரந்தாங்கி, காரைக்குடி, சிவகங்கை, மானாமதுரை, வழியாக இயக்கப்படுகின்றன.

இதற்கு புதன்கிழமை (ஜன.4) முதல் முன்பதிவு செய்யலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.