தூத்துக்குடி வட்டம் மாப்பிள்ளையூரணிரூபவ் மாசிலாமணிபுரம் மற்றும் மூன்றாம் மைல் ஆகிய பகுதிகளில் உள்ள கூட்டுறவு மற்றும் அமுதம் நியாய விலைக்கடைகளில் ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி தலைமையில் சமூகநலன்-மகளிர் உரிமைத்துறை அமைச்சர் பெ.கீதாஜீவன், மீன்வளம் - மீனவர் நலத்துறை மற்றும் கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன், உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர்அர.சக்கரபாணி, தூத்துக்குடி மாநகராட்சி மேயர் பெ.ஜெகன் மற்றும் ஒட்டப்பிடாரம் சட்டப்பேரவை உறுப்பினர் எம்.சி.சண்முகையா ஆகியோர் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு 5 கிலோ அரிசி மற்றும் ரூ.6,000 நிவாரணத்தொகை ஆகியவற்றை வழங்கினார்கள்.