நல்லகண்ணு உடலுக்கு முழு அரசு மரியாதை! முதல்வர் அறிவிப்பு!தியாகப் பெருஞ்சீலர்! நல்லகண்ணுவுக்கு முதல்வர் ஸ்டாலின் புகழஞ்சலி! நல்லகண்ணு உடல் தானம்! கம்யூனிஸ்ட் தலைவர் நல்லகண்ணு காலமானார்!கூட்டணிக்கு தவெக தயார்! காங்கிரஸ் மேலிடப் பொறுப்பாளர்வகைவகையாக வடை சுடும் இபிஎஸ்: முதல்வர் ஸ்டாலின்காஸா இனப் படுகொலையை பிரதமர் மோடி பேச வேண்டும்: காங்கிரஸ்சூரிய சக்தி மின்தகடு இறக்குமதி! இந்தியா மீது அமெரிக்கா 126% வரி?இந்தியா கூட்டணியை உருவாக்கிய முதல்வர் ஸ்டாலினுக்கு பாராட்டு: காங்கிரஸ்மேலும் 2 தகவல் ஆணையா்கள் நியமனம்இன்று தென், வட தமிழகத்தின் ஒருசில இடங்களில் மழைக்கு வாய்ப்புஜேஇஇ 2-ஆம் கட்ட முதன்மைத் தோ்வு: விண்ணப்பிக்க இன்று கடைசிஇந்திய தலைமைத் தோ்தல் ஆணையா் நாளை தமிழகம் வருகை
/

அண்ணா பிறந்தநாள்: நீடாமங்கலத்தில் திமுக, அதிமுகவினர் மாலையணிவித்து மரியாதை

நீடாமங்கலத்தில் பேரறிஞர் அண்ணாவின் 114 ஆவது பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது.

News image
நீடாமங்கலத்தில் முன்னாள் எம்.எல்.ஏ. பி.ராசமாணிக்கம் தலைமையில் அண்ணா சிலைக்கு மாலையணிவித்து மரியாதை செலுத்திய திமுகவினர்.
Updated On :1 பிப்ரவரி 2024, 10:19 am

DIN

நீடாமங்கலம்: நீடாமங்கலத்தில் பேரறிஞர் அண்ணாவின் 114 ஆவது பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது.

விழாவிற்கு திமுக சட்டத்திட்ட திருத்தக் குழு உறுப்பினர் சட்டப்பேரவை முன்னாள் உறுப்பினர் பி.ராசமாணிக்கம்  தலைமை வகித்தார்.

ஒன்றிய பெருந்தலைவர் சோம.செந்தமிழ்ச்செல்வன், வடக்கு ஒன்றிய செயலாளர் கே.வி.கே.ஆனந்து, பேரூர் செயலாளர் ரா.ராஜசேகரன், பேரூராட்சி தலைவர் ஆர்.ராம்ராஜ், ஒன்றிய முன்னாள் செயலாளர் விசு.அண்ணாதுரை, வடக்கு ஒன்றிய முன்னாள் பொறுப்பாளர் சி.கோபாலகிருஷ்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

பெரியார்  சிலையிலிருந்து பேரணியாக புறப்பட்டு பேரறிஞர் அண்ணாவின் திருஉருவ சிலைக்கு மாலை அணிவித்து திமுகவினர் மரியாதை செலுத்தினார்கள்.

இந்நிகழ்ச்சியில் மாவட்ட, ஒன்றிய, பேரூர் கழக நிர்வாகிகள் மற்றும் அனைத்து சார்பு அணி நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.

அதிமுக: நீடாமங்கலத்தில் அதிமுக சார்பில் பேரறிஞர் அண்ணாவின் பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது. கட்சியின் நகர செயலாளர் இ.ஷாஜஹான் தலைமை வகித்தார்.

ஒன்றியசெயலாளர்கள் மணலூர் ராஜேந்திரன், ஆதிஜனகர்,பேரூராட்சி முன்னாள் துணைத்தலைவர் செந்தமிழ்ச்செல்வன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

விழாவில் மாவட்ட, ஒன்றிய, நகர, கிளை நிர்வாகிகள் சார்பு அணியினர் கலந்து கொண்டனர். அண்ணாசிலைக்கு மாலையணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

வலங்கைமான்: வலங்கைமானில் திமுகவினர் மேற்கு ஒன்றிய செயலாளர் வீ.அன்பரசன் தலைமையிலும்,கிழக்கு ஒன்றியசெயலாளர் தெட்சிணாமூர்த்தி, நகரசெயலாளர் சிவநேசன், பேரூராட்சி துணைத்தலைவர் தனித்தமிழ்மாறன் முன்னிலையிலும் பள்ளிவாசலிலிருந்து ஊர்வலமாக புறப்பட்டு அண்ணா சிலைக்கு மாலையணிவித்தனர்.

இதேபோல் அதிமுகவினர் நகரசெயலாளர் சா.குணசேகரன் தலைமையிலும் ஒன்றியசெயலாளர்கள் சங்கர், இளவரசன் ஆகியோர் முன்னிலையிலும் அண்ணா சிலைக்கு மாலையணிவித்து மரியாதை செலுத்தினர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.