மேற்கு வங்கத்தில் நிச்சயம் பாஜக அரசு அமையும்! - அமித் ஷாபாஜகவில் இணைந்த 7 எம்பிக்கள்: மாநிலங்களவை தலைவர் ஒப்புதல்! ஆம் ஆத்மி கோரிக்கை நிராகரிப்பு! விஜய் வேட்புமனுவை ஆய்வு செய்யக் கோரிய மனு தள்ளுபடி! கொடைக்கானலில் 2ஆவது நாளாக முதல்வர் ஸ்டாலின் நடைப்பயிற்சி! ஜப்பானில் நிலநடுக்கம் - ரிக்டர் அளவில் 6.2 ஆகப் பதிவு நீட் தேர்வர்கள் கவனத்திற்கு: மன அழுத்தத்தைப் போக்க உதவி எண் அறிமுகம்!தஞ்சை பெரியகோயில் தேரோட்டம் கோலாகலம்!தங்கம் விலை உயர்வு! இன்றைய நிலவரம்! இளநிலை நீட் தேர்வு: இணையத்தில் ஹால் டிக்கெட் வெளியீடு!
/

தமிழகத்தில் காலியாகும் 6 மாநிலங்களவை இடங்களுக்கு தேர்தல் தேதி அறிவிப்பு

தமிழகத்தில் விரைவில் காலியாக உள்ள 6 மாநிலங்களவை இடங்களுக்கு தேர்தல் நடக்கும் தேதி குறித்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

News image

தேர்தல் ஆணையம்

Updated On :25 பிப்ரவரி 2020, 1:16 pm

புது தில்லி: தமிழகத்தில் விரைவில் காலியாக உள்ள 6 மாநிலங்களவை இடங்களுக்கு தேர்தல் நடக்கும் தேதி குறித்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

தமிழகத்தில் இருந்து அதிமுக சார்பாக சசிகலா புஷ்பா, விஜிலா சத்யானந்த், முத்துக்கருப்பன் மற்றும் செல்வராஜா ஆகிய நால்வரும், திமுகவில் இருந்து திருச்சி சிவா மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பாக டி.கே.ரங்கராஜன் என மொத்தம் ஆறு பேர் தற்போது மாநிலங்களவை உறுப்பினர்களாக பதவி வகித்து வருகிறார்கள்.  இவர்களது பதவிக்காலம் வரும் ஏப்ரல் 2-ஆம் தேதியோடு நிறைவடைகிறது.

இந்நிலையில் காலியாக உள்ள 6 மாநிலங்களவை இடங்களுக்கு தேர்தல் நடக்கும் தேதி குறித்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் மார்ச் 26-ஆம் தேதி இந்த ஆறு இடங்களுக்கு தேர்தல் நடத்தப்பட்டு அன்றே  வாக்கு எண்ணிக்கை நடைபெறும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.