மே 4-ல் 62 மையங்களில் காலை 8 மணி முதல் வாக்கு எண்ணிக்கை! - தேர்தல் ஆணையம்மேற்கு வங்கத்தில் நிச்சயம் பாஜக அரசு அமையும்! - அமித் ஷாபாஜகவில் இணைந்த 7 எம்பிக்கள்: மாநிலங்களவை தலைவர் ஒப்புதல்! ஆம் ஆத்மி கோரிக்கை நிராகரிப்பு! விஜய் வேட்புமனுவை ஆய்வு செய்யக் கோரிய மனு தள்ளுபடி! கொடைக்கானலில் 2ஆவது நாளாக முதல்வர் ஸ்டாலின் நடைப்பயிற்சி! ஜப்பானில் நிலநடுக்கம் - ரிக்டர் அளவில் 6.2 ஆகப் பதிவு நீட் தேர்வர்கள் கவனத்திற்கு: மன அழுத்தத்தைப் போக்க உதவி எண் அறிமுகம்!தஞ்சை பெரியகோயில் தேரோட்டம் கோலாகலம்!தங்கம் விலை உயர்வு! இன்றைய நிலவரம்! இளநிலை நீட் தேர்வு: இணையத்தில் ஹால் டிக்கெட் வெளியீடு!
/

கென்னை நேரில் அழைத்துப் பாராட்டிய ரிஷப் ஷெட்டி!

கென், ரிஷப் ஷெட்டி சந்திப்பு குறித்து...

News image

கென், ரிஷப் ஷெட்டி - dot com

Updated On :27 ஏப்ரல் 2026, 9:46 am

நடிகர் ரிஷப் ஷெட்டி நடிகர் கென்னை நேரில் அழைத்துப் பாராட்டியுள்ளார்.

நடிகர் கென் இயக்கி, நடித்த யூத் திரைப்படம் இந்தாண்டில் இதுவரை அதிகம் வசூலித்த (ரூ. 85 கோடி) தமிழ்ப்படமாக மாறியுள்ளது. தெலுங்கிலும் வரவேற்பு கிடைத்தது. ஓடிடியில் வெளியான பின் பரவலாக கவனத்தை ஈர்த்தது.

தன் முதல் படத்திலேயே அழுத்தமாக ரசிகர்களிடம் சென்ற கென்னைப் பலரும் பாராட்டி வருகின்றனர்.

சில நாள்களுக்கு நடிகர் ரிஷப் ஷெட்டி பதிவொன்றை வெளியிட்டிருந்தார். அதில், “நீண்ட காலம் கழித்து, ஒரு முழுப்படமும் என்னைச் சிரிக்க வைத்ததைக் கண்டேன். காதல், நட்பு, ஆழமான உணர்வுகளுடன் அனைத்து பெற்றோர்களுக்குமான சமர்ப்பணமாக யூத் உருவாகியுள்ளது. தானே எழுதி, இயக்கி, நடிப்பதென்பது உண்மையிலேயே பாராட்டத்தக்கது. அனைத்து நடிகர்களும் திரைக்கு கச்சிதமாக பொருந்தியிருந்தனர். நடிகர்கள் சுராஜ் வெஞ்சரமூடு, தேவதர்ஷினி மற்றும் நண்பர்கள் குழுவினரை மகிழ்ச்சியுடன் பார்க்க முடிந்தது. யூத் திரைப்படத்தை எடுத்தவர் கென். சகோதரரே, நீங்கள் சினிமாவின் சொத்தாக இருப்பீர்கள்" கூறியிருந்தார்.

தற்போது, நடிகர் கென்னை நேரில் அழைத்து ரிஷப் ஷெட்டி பாராட்டியதுடன் தன் வாழ்த்துகளையும் தெரிவித்துள்ளார்.

Actor Rishab Shetty personally invited actor Ken and praised him.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.