திமுக கூட்டணியில்தான் இருக்கிறோம்! ப. சிதம்பரம் சந்திப்புக்குப்பின் மு. வீரபாண்டியன் பேட்டிதஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

கென் சினிமாவின் சொத்து... யூத் படத்தைப் பாராட்டிய ரிஷப் ஷெட்டி!

கென் குறித்து ரிஷப் ஷெட்டி....

News image

ரிஷப் ஷெட்டி, கென்

Updated On :20 ஏப்ரல் 2026, 12:37 pm IST

நடிகர் ரிஷப் ஷெட்டி யூத் திரைப்படத்தைப் பாராட்டி பதிவிட்டுள்ளார்.

நடிகரும் இயக்குநருமான ரிஷப் ஷெட்டி காந்தாரா படம் மூலம் இந்தியளவில் பிரபலமானார். தற்போது, 3 பிரம்மாண்ட பான் இந்திய திரைப்படங்களில் நடித்து வருகிறார். சம்பளமாகவும் ரூ. 100 கோடி வாங்கும் நடிகராக உயர்ந்துள்ளதால் தென்னிந்தியளவில் முக்கியமானவராகவே கருதப்படுகிறது.

இந்த நிலையில், தமிழில் வெளியாகி வெற்றியைப் பெற்ற நடிகர் கென்னின் யூத் திரைப்படத்தை ரிஷப் பாராட்டியுள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்ட பதிவில், “நீண்ட காலம் கழித்து, ஒரு முழுப்படமும் என்னைச் சிரிக்க வைத்ததைக் கண்டேன். காதல், நட்பு, ஆழமான உணர்வுகளுடன் அனைத்து பெற்றோர்களுக்குமான சமர்ப்பணமாக யூத் உருவாகியுள்ளது. தானே எழுதி, இயக்கி, நடிப்பதென்பது உண்மையிலேயே பாராட்டத்தக்கது. அனைத்து நடிகர்களும் திரைக்கு கச்சிதமாக பொருந்தியிருந்தனர். நடிகர்கள் சுராஜ் வெஞ்சரமூடு, தேவதர்ஷினி மற்றும் நண்பர்கள் குழுவினரை மகிழ்ச்சியுடன் பார்க்க முடிந்தது. யூத் திரைப்படத்தை எடுத்தவர் கென். சகோதரரே, நீங்கள் சினிமாவின் சொத்தாக இருப்பீர்கள்" எனப் பாராட்டியுள்ளார்.

ரிஷப் ஷெட்டியே யூத் திரைப்படத்தைப் பாராட்டியுள்ளது பலருக்கும் ஆச்சரியத்தை அளித்துள்ளது. முன்னதாக, டூரிஸ்ட் பேமிலி திரைப்படத்தை இயக்குநர் எஸ். எஸ். ராஜமௌலி பாராட்டியிருந்தது குறிப்பிடத்தக்கது.

Actor Rishab Shetty has posted a message praising the film Youth.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.