மேற்கு வங்க தேர்தலையொட்டி பாரக்பூரில் பிரதமர் மோடி சாலைவலம் மேற்கொண்டார்.
மேற்குவங்கத்தில் முதல்கட்டத் தேர்தல் கடந்த ஏப். 23 ஆம் தேதி நடந்து முடிந்த நிலையில், 142 தொகுதிகளுக்கான இரண்டாம் கட்டத் தேர்தல் ஏப். 29 ஆம் தேதி நடைபெற உள்ளது. மே 4 ஆம் தேதி வாக்குகள் எண்ணப்படுகின்றன.
அதன்படி மேற்குவங்கத்தில் இரண்டாம் கட்டத் தேர்தலுக்கான பிரசாரம் இன்றுடன் நிறைவு பெறும் நிலையில் அங்கு இறுதிக்கட்ட பிரசாரம் தீவிரமடைந்துள்ளது.
பிரதமர் மோடி, மத்திய அமைச்சர் அமித் ஷா ஆகியோர் மேற்குவங்கத்தில் பிரசாரம் செய்து வருகின்றனர்.
நேற்று கொல்கத்தா வந்த மோடி, காளி கோயிலில் சாமி தரிசனம் செய்து தனது பிரசாரத்தைத் தொடங்கினார்.
இன்று கால பாரக்பூரில் பிரமாண்ட பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டு பேசினார். மேற்குவங்கத்தில் பாஜக அரசு அமையும் என்றும் மே 4-க்குப் பிறகு பாஜக அரசு பதவியேற்புக்கு வருவேன் என்றும் தெரிவித்தார்.
தொடர்ந்து பாரக்பூரில் பிரதமர் மோடி சாலைவலம் மேற்கொண்டார். திரளான மக்கள் கூடி அவருக்கு வரவேற்பு அளித்தனர்.
West Bengal Assembly Elections: PM Modi held a roadshow in Barrackpore
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

மே.வங்கத்தில் வாக்குப்பதிவு நாளில் பிரதமர் மோடி சாலை வலம்!
15 ஆண்டுகளாக துரோகமிழைக்கும் திரிணமூல் காங்கிரஸ்: பிரதமர் மோடி
அரசியலில் அதிகளவிலான பெண்கள் நுழைய வேண்டும்: பிரதமர் மோடி
மேற்கு வங்கத்தில் பிரதமர் மோடி நாளை பிரசாரம்!
வீடியோக்கள்

சூப்பர் ஓவரில் சொதப்பிய பூரன் | IPL 2026 | kkr vs lsg | Nicholas Pooran | Super Over
தினமணி செய்திச் சேவை

வெள்ளிச்சுடரே பாடல்!
தினமணி செய்திச் சேவை

கன்னக்குழியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

மண்டாடி படப்பிடிப்பு நிறைவு!
இணையதளச் செய்திப் பிரிவு

