/

ரஜினியிடம் நலம் விசாரித்தார் முதல்வர் பழனிசாமி

ரத்த அழுத்தம் காரணமாக ஹைதராபாத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நடிகர் ரஜினிகாந்தை தொடர்பு கொண்டு முதல்வர் பழனிசாமி நலம் விசாரித்தார்.

News image
ரஜினியிடம் நலம் விசாரித்தார் முதல்வர் பழனிசாமி
Updated On :27 ஜனவரி 2024, 6:13 pm

DIN


சென்னை: ரத்த அழுத்தம் காரணமாக ஹைதராபாத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நடிகர் ரஜினிகாந்தை தொடர்பு கொண்டு முதல்வர் பழனிசாமி நலம் விசாரித்தார்.

இது குறித்து தமிழக அரசு வெளியிட்டிருக்கும் செய்திக் குறிப்பில், தமிழக முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி அவர்கள், ஹைதராபாத்தில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் திரைப்பட நடிகர்  ரஜினிகாந்த் அவர்களை இன்று (26.12.2020) தொலைபேசியில் தொடர்பு கொண்டு அவரது உடல்நலம் குறித்து விசாரித்தார்கள். 

மேலும், அவர் விரைவில் பூரண குணமடைய இறைவனை பிரார்த்திப்பதாகவும் தெரிவித்தார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தெலங்கானா மாநிலம் ஹைதராபாதில் உள்ள தனியாா் மருத்துவமனையில் ரத்த அழுத்த பாதிப்பு காரணமாக நடிகா் ரஜினிகாந்த் வெள்ளிக்கிழமை அனுமதிக்கப்பட்டாா்.

‘அண்ணாத்த’ திரைப்பட படப்பிடிப்புக்காக ரஜினிகாந்த் ஹைதராபாத் சென்றது குறிப்பிடத்தக்கது. ஹைதராபாத்தில் அண்ணாத்த திரைப்பட படப்பிடிப்புக் குழுவினர் சிலருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டதை அடுத்து, ரஜினிகாந்துக்கும் கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு அதில், அவருக்கு கரோனா இல்லை என்று உறுதி செய்யப்பட்டது.

ஹைதராபாத்திலேயே கடந்த ஒரு சில நாள்களாக தன்னைத் தானே தனிமைப்படுத்திக் கொண்டிருந்த ரஜினிகாந்த், திடீரென நேற்று அங்குள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.