ஐபிஎல்: சூப்பர் ஓவரில் லக்னௌவை வீழ்த்தி கொல்கத்தா வெற்றி!பகுதி நேர அரசியல்வாதி ராகுல் காந்தி! நிதின் நவீன் குற்றச்சாட்டு!ரெளடி, பாலியல் குற்றவாளிகளை பாஜக தண்டிக்கும்: மேற்கு வங்கத்தில் மோடி பிரசாரம்கேரளத்தில் கடும் வெப்பம்: பல மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை! 2027 மக்கள் தொகை கணக்கெடுப்பில் குடிமக்கள் அனைவரும் பங்கேற்க வேண்டும்: பிரதமர் மோடிவரும் 30ஆம் தேதி 6 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு தில்லியில் சுவிஸ் விமானத்தில் திடீர் தீ: 6 பயணிகள் காயம் நீட் தேர்வு நுழைவுச் சீட்டு நாளை வெளியீடு!மே 4-ல் ஆஸ்திரேலியா செல்கிறார் விஜய்?தேர்தல் எதிரொலி: விமான டிக்கெட்டுகள் விலை கடும் உயர்வு!டிரம்ப் விருந்தில் துப்பாக்கிச் சூடு! ஜனநாயகத்தில் வன்முறைக்கு இடமில்லை: பிரதமர் மோடிடிரம்ப் பங்கேற்ற இரவு விருந்தில் துப்பாக்கிச் சூடு: ஒருவர் கைது
/

கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கு திமுக கொடுத்த ரூ. 25 கோடி: பதறவைத்த பிரமாணப் பத்திரம்  

இரண்டு கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கு தேர்தல் நன்கொடையாக திமுக ரூ. 25 கோடி கொடுத்துள்ளதாக தேர்தல் ஆணைய பிரமாணப் பத்திரங்களில் தகவல் வெளியாகியுள்ளது.

News image

திமுக தேர்தல் நிதி

Updated On :23 செப்டம்பர் 2019, 1:55 pm

புது தில்லி: இரண்டு கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கு தேர்தல் நன்கொடையாக திமுக ரூ. 25 கோடி கொடுத்துள்ளதாக தேர்தல் ஆணைய பிரமாணப் பத்திரங்களில் தகவல் வெளியாகியுள்ளது.

ஒவ்வொரு தேர்தல் முடிந்த பின்னரும் அரசியல் கட்சிகள் அதுதொடர்பான வரவு செலவு விபரங்களை, தேர்தல் ஆணையத்திடம் சமர்ப்பிக்க வேண்டியது கட்டாயமாகும். அந்த வகையில் சமீபத்தில் நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தல் தொடர்பான கணக்குகளை அரசியல் கட்சிகள் சமர்ப்பித்து வருகின்றன.  அந்த பிரமாணப் பாத்திரங்களை மேற்கோள் காட்டி ஊடகங்களில் வெளியாகியுள்ள செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பாக ஜூலை 10 மற்றும் செப்டம்பர் 13 ஆகிய இரு தேதிகளில் பிரமாணப் பத்திரங்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதில் தேர்தல் செலவு தோராயமாக ரூ. 7.2 கோடி என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இந்திய கம்யூனிஸ்ட் கட்சி இதுவரை பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்யவில்லை.

அதேசமயம் திமுக தரப்பில் இருந்து தாக்கல் செய்யப்பட்ட பிரமாணப் பத்திரத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு ரூ. 10 கோடியும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு ரூ. 15 கோடியும் தேர்தல் நிதியாக அளிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. அதேபோல் மொத்த செலவு ரூ. 70 கோடி என்றும், அதில் ரூ. 40 கோடி கூட்டணிக் கட்சிகளுக்கு தேர்தல் நிதியாக வழங்கியதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.   

அதில் மார்க்சிசிஸ்டுக்கு ஏப்ரல் 5, 8 மற்றும் 9 ஆகிய தேதிகளில் மூன்று தவணைகளாகவும்,  இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு இரண்டு தவணைகளாகவும் தேர்தல் நிதி வழங்கப்பட்டுள்ளது என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஆனால் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பாக  தாக்கல் செய்யப்பட்டுள்ள பிரமாணப் பத்திரத்தில் நிதி பெற்றது குறித்த  விபரம் தெரிவிக்கப்படவில்லை. 

இந்த விபரம் குறித்து சிபிஎம் பொலிட் பீரோ உறுப்பினர் சலிமிடம் ஐ.ஏ.என்.எஸ் செய்தி நிறுவனம் கேள்வி எழுப்பிய போது, 'தேசிய அளவில் திமுகவுடன் கூட்டணி இல்லை என்பதால் அதுகுறித்து மாநிலத் தலைமைதான் பதிலளிக்க வேண்டும்’ என்று தெரிவித்தார்.

அதேசமயம் பாஜக செய்தித்தொடர்பாளர் நலின் கோஹ்லி இதனைக் கடுமையாக விமர்சித்துள்ளார். இந்த விவகாரம் தற்போது அரசியல் வட்டாரங்களில் விவாதப் பொருளாகியுள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.