மார்ச் 1 - திருப்பரங்குன்றத்தில் பிரதமர் மோடி தரிசனம்! ஜெயலலிதா மறைந்தபிறகு கட்டாயப்படுத்தி என்னை முதல்வராக்கினார்கள்: ஓபிஎஸ்பொங்கல் தொகுப்புடன் ஆண்டுதோறும் ரூ. 1,000 வழங்கப்படும்: இபிஎஸ் அறிவிப்புஒவ்வொரு குடும்பத்துக்கும் ரூ. 10,000 கருணைத் தொகை! - அதிமுகவின் தேர்தல் வாக்குறுதிகள்!தமிழகம் காக்க போராடிய தலைவர்! ஜெயலலிதாவுக்கு இபிஎஸ் புகழஞ்சலி!நல்லகண்ணு உடல்நிலை தொடர் பின்னடைவு!
/

மதுரை என்கவுண்டர்: ரவுடிகள் 2 பேர் சுட்டுக்கொலை

மதுரையில் ரவுடிகள் இரண்டு பேர் வியாழக்கிழமை மாலை போலீஸாரால் என்கவுண்டர் செய்யப்பட்டனர்.

News image
Updated On :30 ஜனவரி 2024, 12:22 pm

Raghavendran

மதுரையில் கொலை முயற்சி, கட்டப்பஞ்சாயத்து, ஆள்கடத்தல் உள்ளிட்ட பல்வேறு சட்டவிரோத செயல்களில் தொடர்புடைய ரவுடிகள் முத்து இருளாண்டி (எ) மந்திரி மற்றும் சகுனி கார்த்திக் ஆகிய 2 பேர் காவல்துறையால் சுட்டுக்கொல்லப்பட்டனர்.

மதுரை சிக்கந்தர்சாவடியில் உள்ள ஒரு வீட்டில் பல குற்ற வழக்குகளில் தொடர்புடைய இவர்கள் இருவரையும் போலீஸார் ரகசியமாக சுற்றிவளைத்து கைது செய்ய முயன்றபோது அவர்கள் தங்களிடம் இருந்த துப்பாக்கியைக் கொண்டு தாக்க முயன்றதால் தற்காப்புக்காக போலீஸார் நடத்திய பதில் தாக்குதலில் ரவுடிகள் இருவரும் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளனர்.

இதுகுறித்து மதுரை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் மணிவண்ணன் கூறியதாவது:

கொலை குற்றம் தொடர்பாக முத்து இருளாண்டி (எ) மந்திரி மற்றும் சகுனி கார்த்திக் ஆகிய 2 பேரையும் கைது செய்ய முயன்ற போது, அவர்கள் தங்களிடம் இருந்த துப்பாக்கியைக் கொண்டு சுட முயன்றனர். எனவே தற்காப்பு காரணமாக போலீஸார் நடத்திய பதில் தாக்குதலில் ரவுடிகள் இருவரும் சுடப்பட்டனர்.

செல்லூர் காவல்நிலையத்தைச் சேர்ந்த போலீஸார் இவர்களைப் பிடிக்க முயன்றபோது இச்சம்பவம் நடந்துள்ளது. இதில் 2 போலீஸாருக்கு காயம் ஏற்பட்டுள்ளது. ரவுடிகளிடம்  இருந்து முதல்கட்டமாக ஒரு துப்பாக்கி கைப்பற்றப்பட்டுள்ளது. மற்றவை விசாரணைக்குப் பின்னர் தெரிவிக்கப்பட்டும் என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.