அரசுப் போக்குவரத்துக் கழகத் தொழிலாளர்களின் ஊதிய உயர்வு பிரச்னை குறித்து தொழிற்சங்கங்கள், நிர்வாகத்திடம் மத்தியஸ்தர் இ.பத்மநாபன் சனிக்கிழமை (பிப்.24) மீண்டும் விசாரணை நடத்துகிறார்.
அரசுப் போக்குவரத்துக் கழக ஊழியர்களுக்கான 13-ஆவது ஊதிய ஒப்பந்தத்தில் ஏற்பட்ட முரண்பாடுகளைக் களைய, சென்னை உயர் நீதிமன்றம் ஓய்வுபெற்ற நீதிபதி இ. பத்மநாபனை மத்தியஸ்தராக நியமித்து உத்தரவிட்டது. அவர் 46 தொழிற்சங்கங்கள் மற்றும் அரசுத் தரப்பு, போக்குவரத்துத் துறை நிர்வாகிகளை பிப்.9-ஆம் தேதி அழைத்துப் பேச்சுவார்த்தை நடத்தினார். இதில் பிப்.16-ஆம் தேதிக்குள், தொழிற்சங்கத்தினர், ஊதிய உயர்வு சார்ந்த, தங்களது கோரிக்கைகள் மற்றும் ஆட்சேபனைகளை எழுத்துப்பூர்வமாக தெரிவிக்க வேண்டும். அரசின் விளக்கத்தை, 23-ஆம் தேதிக்குள் அளிக்க வேண்டும் என நீதிபதி உத்தரவிட்டார். அடுத்தகட்ட விசாரணை பிப். 24 இல் நடக்கும் என்றும் அறிவித்தார். அதனடிப்படையில் இரு தரப்பும் குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் தங்கள் கோரிக்கைகளை மனுவாக அளித்துள்ளனர்.
இதையடுத்து இன்று இருதரப்புக்கும் இடையேயான விவாதங்களை மத்தியஸ்தர் கேட்டறியவுள்ளார். வரும் மார்ச் 1-ம் தேதி அவர் அறிக்கை தாக்கல் செய்வார் எனத் தெரிகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

ஆண்டிமடம் அருகே சுமை ஆட்டோ தீப்பிடித்து விபத்து ரூ.10 லட்சம் மதிப்பிலான பொருள்கள் எரிந்து நாசம்

உணவகத்தில் அராஜகம்: சிறுவன் உள்ளிட்ட இருவா் கைது

காரைக்கால் அருகே மீனவா் தற்கொலை

மாடியிலிருந்து தவறி விழுந்த முதியவா் உயிரிழப்பு
வீடியோக்கள்

உன்னை நம்பி பாடல் வெளியானது!
இணையதளச் செய்திப் பிரிவு
3 நாள்களுக்குள் ஈரான் எண்ணெய் உள்கட்டமைப்புகள் வெடிக்கும்! Trump எச்சரிக்கை
இணையதளச் செய்திப் பிரிவு

சூப்பர் ஓவரில் சொதப்பிய பூரன் | IPL 2026 | kkr vs lsg | Nicholas Pooran | Super Over
தினமணி செய்திச் சேவை

வெள்ளிச்சுடரே பாடல்!
தினமணி செய்திச் சேவை

