மதுரை மீனாட்சியம்மன் கோயிலில் வெள்ளிக்கிழமை இரவு பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இதனால் கோயிலுக்குள் இருக்கும் வீர வசந்தராயர் மண்டபம், 36 கடைகள் வரை சேதமடைந்துள்ளதாக மதுரை மாவட்ட ஆட்சியர் வீரராகவராவ் தெரிவித்துள்ளார்.
மீனாட்சியம்மன் கோயிலில் ஏற்பட்ட தீ விபத்தில் சேதமடைந்த பகுதிகளை நேரில் பார்வையிட்ட பின்னர் அவர் இதனை செய்தியாளர்களிடம் தெரிவித்தார். மேலும், இந்த தீ விபத்து குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருவதாகவும் கூறினார்.
இதனையடுத்து, மீனாட்சியம்மன் கோயிலுக்குள் சனிக்கிழமை காலை முதல் வழக்கம் போல பக்தர்கள் அனுமதிக்கப்பட்டு எந்தவிதமான இடையூறும் இல்லாமல் சுவாமி தரிசனம் மேற்கொண்டு வருகின்றனர்.
இந்நிலையில், மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் தீ விபத்து ஏற்பட்ட பகுதிகளில் அறநிலையத்துறை அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன், வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் ஆகியோர் சனிக்கிழமை நேரில் சென்று ஆய்வு செய்தனர்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அறநிலையத்துறை அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன் பேசியதாவது:
மீனாட்சி அம்மன் கோயிலில் தீ விபத்து ஏற்பட்ட பகுதிகளில் சிலைகள் ஏதும் பாதிக்கப்படவில்லை. மீனாட்சி அம்மன் கோயில் தீ விபத்து குறித்து ஆய்வு நடத்த விரைவில் குழு அமைக்கப்படும். தீ விபத்திற்கான காரணங்கள் குறித்து ஆய்வு நடந்து வருகிறது என்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்

புதுச்சேரியில் ஒப்பந்த ஆசிரியா்கள் 250 போ் கைது

வரி விதிப்பு விவகாரம்: உலக நாடுகளுக்கு அமெரிக்க அதிபா் டிரம்ப் மிரட்டல்

தேசிய பாரா தடகளப் போட்டியில் வென்ற மாணவருக்கு பாராட்டு

மேல்நிலை நீா்த்தேக்கத் தொட்டியை பயன்பாட்டுக்கு கொண்டுவரக் கோரிக்கை
வீடியோக்கள்

தாய் கிழவி டிரைலர்!
தினமணி வீடியோ செய்தி...

மாட்டிக்கிட்டான் மைனரு குஞ்சு பாடல்!
தினமணி வீடியோ செய்தி...

வெளியானது இறுதி வாக்காளர் பட்டியல் | செய்திகள்: சில வரிகளில் | 23.02.26
தினமணி வீடியோ செய்தி...

#t20wc | தென்னாப்பிரிக்கா இன்னும் பழைய பகையை மறக்கலை: அஹமதாபாதில் அடிபணிந்த இந்தியா! | T20 World Cup
தினமணி வீடியோ செய்தி...

