பேடிஎம் வங்கியின் உரிமத்தை ரத்து செய்தது ஆர்பிஐ!மணிப்பூரில் மீண்டும் வன்முறை: 3 பேர் பலி, பலர் காயம்பாஜகவில் இணைந்த ஆம் ஆத்மி எம்.பி.க்கள்! தமிழ்நாடு தேர்தல்! கிராமங்கள் சமநிலை செய்த நகரங்கள் எப்படியிருக்கின்றன மக்கள் வாக்களித்த மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள்? ஈரானை கடிதம் மூலம் ஆளும் மோஜ்தபா! எங்கே, எப்படி இருக்கிறார்?ஈரானை கடிதம் மூலம் ஆளும் மோஜ்தபா! எங்கே, எப்படி இருக்கிறார்?தேர்தல் அரசியல் வரலாற்றில் சிகரமான வாக்குப்பதிவு: விஜய்முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் திமுக வேட்பாளர்கள் சந்திப்புகொடைக்கானல் செல்கிறார் முதல்வர் ஸ்டாலின்!
/

சென்னை விமான நிலையம் அருகே பொதுமக்கள் முன்பு அடிதடியில் ஈடுபட்ட காவலர்கள்

சென்னை மீனம்பாக்கம் விமான நிலையம் அருகே வாகன தணிக்கையில் ஈடுபட்டுக் கொண்டிருந்த காவலர்கள் திடீரென பொதுமக்கள் முன்னிலையில் அடிதடியில் ஈடுபட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Updated On :4 ஆகஸ்ட் 2018, 9:08 am


சென்னை: சென்னை மீனம்பாக்கம் விமான நிலையம் அருகே வாகன தணிக்கையில் ஈடுபட்டுக் கொண்டிருந்த காவலர்கள் திடீரென பொதுமக்கள் முன்னிலையில் அடிதடியில் ஈடுபட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

மீனம்பாக்கத்தில் வெள்ளிக்கிழமை இரவு 7.30 மணியளவில் துணை ஆய்வாளர் கெல்வின் வாகன தணிக்கைப் பணிக்கு அமர்த்தப்பட்டார். அவர் தலைமைக் காவலர் தட்சிணாமூர்த்தியை குடித்து விட்டு வாகனம் ஓட்டி வருகிறார்களா என்பதை ஆய்வு செய்யச் சொல்லியிருக்கிறார். 

தட்சிணாமூர்த்தி, மற்றொரு தலைமைக் காவலர் கோபிநாத்துக்கு பணியை மாற்றியுள்ளார். இதில் இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டு அடிதடியாக மாறியது.

தட்சிணாமூர்த்தியை, கோபிநாத் தனது வாக்கி டாக்கியால் தாக்கியதைப் பார்த்த பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

உடனடியாக, உயர் அதிகாரிகள் சம்பவம் குறித்து விசாரித்து, தட்சிணாமூர்த்தியை மருத்துவமனையில் சேர்த்தனர். கெல்வின் பணிக் காத்திருப்பில் வைக்கப்பட்டார். கோபிநாத் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.