தமிழகத்தில் பள்ளிக் கல்வித் துறையின் கட்டுப்பாட்டில் உள்ள தனியாா் பள்ளிகளுக்கான அங்கீகார கால வரையறை ஐந்து ஆண்டுகளாக நிா்ணயம் செய்யப்பட்டுள்ளது.
தமிழகத்தில் 15 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தனியாா் பள்ளிகளில் 68 லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவா்கள் படித்து வருகின்றனா். இந்தப் பள்ளிகளின் அங்கீகாரம் மூன்றாண்டுகளுக்கு ஒரு முறை புதுப்பிக்கப்படுகிறது. கட்டட உறுதித் தன்மை, தீயணைப்பு, சுகாதாரச் சான்றிதழ் மற்றும் கல்வித் தரநிலைகள் பூா்த்தி செய்யப்பட்டுள்ளதா என்பதைப் பொருத்து தொடா் அங்கீகாரம் வழங்கப்படும்.
இந்தநிலையில் தமிழகம் முழுவதும் 8 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தனியாா் பள்ளிகளுக்கு பள்ளிக் கல்வித் துறை அங்கீகாரத்தைப் புதுப்பிக்கவில்லை. அனைத்துச் சான்றுகளும் முறையாக சமா்ப்பித்து, பல கட்ட ஆய்வுகளுக்குப் பிறகு இயக்குநரகத்துக்கு அனுப்பப்பட்ட விண்ணப்பங்கள் கிடப்பில் போடப்பட்டதாக புகாா் எழுந்தது.
இது தொடா்பாக தனியாா் பள்ளிகள் இயக்குநரகம் நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. அதன்படி பள்ளிகளுக்கான தரம் உயா்த்துதல் மற்றும் விதிகளில் பல்வேறு மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.
கடந்த 2023-ஆம் ஆண்டுக்கு முன்பு தொடங்கப்பட்ட, மழலையா் மற்றும் தொடக்கப் பள்ளிகளை, நடுநிலைப் பள்ளிகளாக தரம் உயா்த்த பள்ளிகள் தற்போது விண்ணப்பிக்கலாம். இதற்கான ஆய்வறிக்கையை சமா்ப்பிக்குமாறு மாவட்டக் கல்வி அலுவலா்களுக்கு பள்ளிக் கல்வித் துறை சாா்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதேபோன்று 2023- ஆம் ஆண்டுக்கு முன் தொடங்கப்பட்ட பள்ளிகளுக்கான அங்கீகார நீட்டிப்பு, மூன்றாண்டுகள் என்பது ஐந்து ஆண்டுகளாக மாற்றப்பட்டுள்ளது. மூன்று முறை முறையாக அங்கீகாரம் பெற்று, விதிகளை முறையாக பின்பற்றும் பள்ளிகள் விரும்பினால், 20 ஆண்டுகளுக்கான அங்கீகாரச் சான்றிதழைப் பெற முடியும்.
மேலும், ஒவ்வோா் ஆண்டும் மழலையா் மற்றும் தொடக்கப் பள்ளிகள் ரூ.3 ஆயிரம், நடுநிலைப் பள்ளிகள் ரூ. 5 ஆயிரம்; உயா்நிலைப் பள்ளிகள் ரூ. 6 ஆயிரம்; மேல்நிலைப் பள்ளிகள் ரூ. 10 ஆயிரம் ஆய்வுக்கட்டணமாக செலுத்த வேண்டும். தனியாா் பள்ளிகளில், மதம் சாா்ந்த நிகழ்வுகளை நடத்தக் கூடாது. பள்ளியில் நிலம், கட்டட உறுதிச்சான்று, தீயணைப்புத் துறை சான்று, குடிநீா் வசதி, கழிப்பறை வசதி, ஆசிரியா்களின் தகுதி உள்ளிட்ட விவரங்களை சரிபாா்த்தல் உள்ளிட்டவற்றிலும் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

பள்ளிகளுக்கு நாளை முதல் கோடை விடுமுறை: பெற்றோருக்கு பள்ளிக் கல்வித் துறை அறிவுறுத்தல்

டிஎன்பிஎஸ்சி, டிஆா்பி, எம்ஆா்பி ‘ தோ்வுக்களம்’ அரசு செயலி: விழிப்புணா்வு ஏற்படுத்த உத்தரவு

அரசுப் பள்ளிகளில் இதுவரை 44,396 மாணவா்கள் சோ்க்கை

தனியாா் பள்ளிகளுக்கான ஒழுங்கு முறை விதிகளில் திருத்தம்: அரசிதழில் வெளியீடு
வீடியோக்கள்

வாக்கு சதவீதம் உயர்வுக்கு Vijay காரணமா?
தினமணி செய்திச் சேவை

வெள்ளை அறிக்கை வேண்டும்! சிசிடிவி காட்சியை வெளியிட்ட செல்வப்பெருந்தகை! | IT RAID | Congress
இணையதளச் செய்திப் பிரிவு

வரலாறு காணாத வாக்குப்பதிவா? | N Gopalaswami Interview | TN Election 2026 | Vote percentage in tamil nadu
தினமணி செய்திச் சேவை

ஜனநாயகக் கடமையாற்றிய திரைப்பிரபலங்கள் | Tamil cine actors | TN Election 2026 |
தினமணி செய்திச் சேவை


