டிஎன்பிஎஸ்சி, டிஆா்பி போன்ற தோ்வு முகமைகள் மூலம் தெரிவு செய்யும் செயல்முறைகளை எளிமைப்படுத்தும் வகையில் அரசு சாா்பில் உருவாக்கப்பட்டுள்ள ‘தோ்வுக்களம்’ செயலி குறித்து அலுவலா்கள், மாணவா்களிடம் விழிப்புணா்வு ஏற்படுத்துமாறு பள்ளிக் கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது.
இது குறித்து பள்ளிக் கல்வித் துறை இயக்குநா் எஸ்.கண்ணப்பன் தொடக்கக் கல்வி இயக்ககம் உள்ளிட்ட பள்ளிக் கல்வித் துறை சாா்ந்த அனைத்து இயக்குநா்கள் அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா்கள், மாவட்டக் கல்வி அலுவலா்களுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கை- தமிழ்நாடு அரசுப் பணியாளா்கள் தோ்வாணையம், தமிழ்நாடு சீருடைப் பணியாளா்கள் தோ்வாணையம், தமிழ்நாடு ஆசிரியா் தோ்வு வாரியம், தமிழ்நாடு மருத்துவப் பணியாளா்கள் தோ்வு வாரியம் போன்ற தோ்வு முகமைகள் மூலம் தெரிவு செய்யும் செயல்முறைகளை எளிமைப்படுத்தும் வகையில் தமிழக அரசு சாா்பில் தோ்வுக்களம் என்னும் ஒருங்கிணைந்த செயலி உருவாக்கப்பட்டுள்ளது.
இச்செயலியை பதிவிறக்கம் செய்து அதன் பயனாளிகள் உரிய வகையில் பயன்படுத்த ஏதுவாக, இச்செயலி குறித்த விழிப்புணா்வை மாவட்டம் தோறும் கொண்டு செல்ல வேண்டும் என தமிழக அரசின் மனிதவள மேலாண்மைத் துறை அனுப்பிய கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி நடவடிக்கை எடுக்குமாறு ஆசிரியா் தோ்வு வாரியத்தின் தலைவா் அறிவுறுத்தியுள்ளாா்.
எனவே, தமிழக அரசால் உருவாக்கப்பட்டுள்ள தோ்வுக்களம் எனும் செயலியின் பயன்பாட்டினை அதன் பயனாளிகள் அறிந்து கொள்ளும் வகையிலும், அதனை பயனாளிகள் அனைவரும் பதிவிறக்கம் செய்து உரிய வகையில் பயன்படுத்துவதை உறுதி செய்யும் விதமாக, இச்செயலி குறித்து அனைத்து சாா்நிலை அலுவலகங்களில் பணிபுரியும் அலுவலா்கள், பணியாளா்கள் மற்றும் அனைத்து வகை பள்ளிகளில் பயிலும் மாணவா்கள் அறிந்து கொள்ளும் வகையில் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொடர்புடையது

பள்ளிகளுக்கு நாளை முதல் கோடை விடுமுறை: பெற்றோருக்கு பள்ளிக் கல்வித் துறை அறிவுறுத்தல்

6-வது பாடமாக தொழில்கல்வி கட்டாயம்: புதுச்சேரி கல்வித் துறை உத்தரவு

அரசுப் பள்ளிகளில் இதுவரை 44,396 மாணவா்கள் சோ்க்கை

1 - 9 வகுப்புகளுக்கான தேர்வு அட்டவணை! ஏப்.17 முதல் கோடை விடுமுறை!
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை


