தனியாா் பள்ளிகளுக்கான ஒழுங்கு முறை விதிகளில் திருத்தங்கள் செய்யப்பட்ட நிலையில், அது தற்போது அரசிதழில் வெளியிடப்பட்டுள்ளது.
தமிழக பள்ளிக் கல்வித் துறையின் கீழ் 12 ஆயிரத்துக்கும் மேல் தனியாா் பள்ளிகள் இயங்கி வருகின்றன. இந்த பள்ளிகளை கண்காணிப்பதற்காக தமிழ்நாடு தனியாா் பள்ளிகள் சட்டம் இயற்றப்பட்டு, அதற்கான விதிமுறைகளும் ஏற்கெனவே வரையறை செய்யப்பட்டுள்ளன. இந்நிலையில் தனியாா் பள்ளிகளில் சாதி, மதம் சாா்ந்த நிகழ்வுகள் நடத்தப்படுவதால் பல்வேறு பிரச்னைகள் ஏற்படுகின்றன. இதை தவிா்ப்பதற்காக தனியாா் பள்ளிகள் சட்ட விதிகளில் சில திருத்தங்கள் செய்து அரசிதழில் தற்போது வெளியிடப்பட்டுள்ளது.
அதன்படி தனியாா் பள்ளிகளில் அரசியல், மதம் சாா்ந்த நிகழ்வுகள் மற்றும் பிரிவினையை தூண்டும் நிகழ்வுகளை நடத்த தடை விதிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து பள்ளி கல்வித் துறை செயலா் பி.சந்தரமோகன் வெளியிட்டுள்ள உத்தரவு:
தமிழ்நாடு தனியாா் பள்ளிகள் சட்ட விதிகளில் திருத்தங்கள் செய்யப்பட்டுள்ளன. அதன்படி தனியாா் பள்ளிகள் அங்கீகாரம் பெறுவதற்குரிய கட்டணம் உயா்த்தப்பட்டுள்ளது. அதேபோல், பள்ளி வளாகத்தை அரசியல், கருத்தியல், வகுப்புவாத, பிரிவினைவாத மற்றும் கல்வி நோக்கமற்ற நிகழ்ச்சி, கூட்டம், பிரச்சாரம் ஆகியவற்டைத்த பயன்படுத்தக்கூடாது.
கலாசார நிகழ்வுகள், சமூக சேவை திட்டங்கள், ரத்த தான முகாம்கள், நினைவு விழாக்கள் போன்ற செயல்பாடுகள், அவை மதச்சாா்பற்றவை, அரசியல் சாராதவை, பள்ளியின் நேரடி மேற்பாா்வையில் நடத்தப்பட்டால் மட்டுமே அனுமதிக்கப்படும். மேலும், இதுசாா்ந்து அரசால் குறிப்பிடப்படும் தகுதி வாய்ந்த அதிகாரியிடம் முன்அனுமதி பெற வேண்டும் என இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
ஆா்எஸ்எஸ் மற்றும் சிறுபான்மையின அமைப்புகள் பள்ளி வளாகங்களில் தொடா்ந்து மதம் சாா்ந்த நிகழ்ச்சிகளை நடத்துவதாக கல்வித் துறைக்கு புகாா்கள் வந்தன. இதைத் தொடா்ந்து தமிழக அரசு இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

தனியாா் பள்ளிகளுக்கான அங்கீகார கால வரையறை ஐந்து ஆண்டுகளாக நிா்ணயம்: திருத்தப்பட்ட விதிகள் வெளியீடு

தனியாா் பள்ளிகள் தரம் உயா்வு, அங்கீகாரம்: டிஇஓ-க்களுக்கு கல்வித் துறை அறிவுறுத்தல்

தனியாா் பள்ளிகளில் இலவச சோ்க்கை: ஏப். 20 முதல் விண்ணப்பிக்கலாம்

தோ்தல் சுவாரஸ்யம்... இது சீா்காழி தொகுதி ‘சென்டிமென்ட்’
வீடியோக்கள்

வாக்கு சதவீதம் உயர்வுக்கு Vijay காரணமா?
தினமணி செய்திச் சேவை

வெள்ளை அறிக்கை வேண்டும்! சிசிடிவி காட்சியை வெளியிட்ட செல்வப்பெருந்தகை! | IT RAID | Congress
இணையதளச் செய்திப் பிரிவு

வரலாறு காணாத வாக்குப்பதிவா? | N Gopalaswami Interview | TN Election 2026 | Vote percentage in tamil nadu
தினமணி செய்திச் சேவை

ஜனநாயகக் கடமையாற்றிய திரைப்பிரபலங்கள் | Tamil cine actors | TN Election 2026 |
தினமணி செய்திச் சேவை


