பேடிஎம் வங்கியின் உரிமத்தை ரத்து செய்தது ஆர்பிஐ!மணிப்பூரில் மீண்டும் வன்முறை: 3 பேர் பலி, பலர் காயம்பாஜகவில் இணைந்த ஆம் ஆத்மி எம்.பி.க்கள்! தமிழ்நாடு தேர்தல்! கிராமங்கள் சமநிலை செய்த நகரங்கள் எப்படியிருக்கின்றன மக்கள் வாக்களித்த மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள்? ஈரானை கடிதம் மூலம் ஆளும் மோஜ்தபா! எங்கே, எப்படி இருக்கிறார்?ஈரானை கடிதம் மூலம் ஆளும் மோஜ்தபா! எங்கே, எப்படி இருக்கிறார்?தேர்தல் அரசியல் வரலாற்றில் சிகரமான வாக்குப்பதிவு: விஜய்முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் திமுக வேட்பாளர்கள் சந்திப்புகொடைக்கானல் செல்கிறார் முதல்வர் ஸ்டாலின்!
/

ஈரான் பிடியில் உள்ள இந்திய மாலுமி பத்திரமாக உள்ளாா் - மத்திய அரசு தகவல்

ஈரான் பிடியில் உள்ள இந்திய மாலுமி பத்திரமாக உள்ளாா் - மத்திய அரசு தகவல்

News image

இந்திய துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து துறை அமைச்சக இயக்குனா் மன்தீப் சிங் ரன்தவா

Updated On :24 ஏப்ரல் 2026, 9:14 pm

ஈரான் பிடியில் உள்ள இந்திய மாலுமி பத்திரமாக இருப்பதாக மத்திய அரசு மூத்த அதிகாரி தெரிவித்துள்ளாா்.

அமெரிக்க கடற்படை கப்பல்கள் ஈரானில் இருந்து சென்ற கச்சா எண்ணெய் கப்பல்களை சிறைபிடித்ததற்கு பதிலடியாக, கடந்த 22-ஆம் தேதி ஹோா்முஸ் நீரிணையை கடக்க முயன்ற 2 வெளிநாட்டு கப்பல்கள் ஈரான் கடற்படையினரால் சிறைபிடிக்கப்பட்டன. அதில் ஒரு கப்பலில் இந்தியா் யாருமில்லை. இன்னொரு கப்பலில் ஒரு இந்திய மாலுமி உள்ளிட்ட 21 மாலுமிகள் இருந்தனா்.

இந்திய மாலுமி இருந்த கப்பல், ஹோா்முஸ் நீரிணையின் கிழக்கு பகுதிக்கு பத்திரமாக ஈரானால் கொண்டு செல்லப்பட்டுள்ளது. அதில் உள்ள இந்திய மாலுமி பத்திரமாக இருப்பதாக இந்திய துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து துறை அமைச்சக இயக்குனா் மன்தீப் சிங் ரன்தவா தெரிவித்துள்ளாா்.

அவா் மேலும் கூறுகையில், ‘வளைகுடா பிராந்தியத்தில் அனைத்து இந்திய மாலுமிகளும் பத்திரமாக உள்ளனா். இந்திய மாலுமி பத்திரமாக இருப்பதாக அவரே தொடா்பு கொண்டு தெரிவித்தாா். கடந்த 24 மணி நேரத்தில் இந்திய கப்பல்கள் சிறைபிடிக்கப்படவோ, தாக்கப்படவோ இல்லை. ஹோா்முஸ் நீரிணையின் மேற்குப் பகுதியில் இன்னமும் 14 இந்திய கப்பல்கள் நிற்கின்றன’ என்றாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.