/

உங்கள் கடற்படைக்கு எடுத்துரையுங்கள்: இலங்கை மீனவர்களிடம் நீதிபதியின் உணர்வுப்பூர்வ பேச்சு

இந்திய அதிகாரிகளின் கண்ணியம் குறித்து, இலங்கை கடற்படை அதிகாரிகளுக்கு எடுத்துரையுங்கள் என்று இலங்கை மீனவர்களிடம் எழும்பூர் நீதிமன்ற நீதிபதி கூறியுள்ளார்.

News image
Updated On :29 ஜனவரி 2024, 11:11 am

DIN


எழும்பூர்: இந்திய அதிகாரிகளின் கண்ணியம் குறித்து, இலங்கை கடற்படை அதிகாரிகளுக்கு எடுத்துரையுங்கள் என்று இலங்கை மீனவர்களிடம் எழும்பூர் நீதிமன்ற நீதிபதி கூறியுள்ளார்.

இந்திய கடல் பகுதியில் எல்லை தாண்டி வந்து மீன்பிடித்த இலங்கை மீனவர்கள் 10 பேர் நேற்று கைது செய்யப்பட்டு, எழும்பூர் நீதிமன்றத்தில் இன்று ஆஜர்படுத்தப்பட்டனர்.

அவர்களை வரும் 23ம் தேதி வரை காவலில் வைக்குமாறு உத்தரவிட்ட நீதிபதி சந்திரன், இந்திய அதிகாரிகள் உங்களை தாக்கினார்களா என்று இலங்கை மீனவர்களிடம் கேள்வி எழுப்பினார். அப்போது, இந்திய அதிகாரிகள் தங்களை கண்ணியமாக நடத்தியதாக இலங்கை மீனவர்கள் நீதிபதியிடம் கூறினர்.

அப்போது, தமிழக மீனவர்களை மட்டும் இலங்கை கடற்படையினர் சுடுவது ஏன்? என்று நீதிபதி கேள்வி எழுப்பினார். மேலும், இந்திய அதிகாரிகள் கண்ணியமாக நடத்திய விதம் குறித்து இலங்கை கடற்படையினருக்கு எடுத்துரையுங்கள் என்று இலங்கை மீனவர்களிடம் நீதிபதி அறிவுரை வழங்கினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.