15 ஆண்டுகளாக துரோகமிழைக்கும் திரிணமூல் காங்கிரஸ்: பிரதமர் மோடிமேற்கு வங்கம்: மாலை 5 மணி வரை 89.93% வாக்குகள் பதிவு!தமிழ்நாட்டில் மாலை 5 வரை 82.24% வாக்குப்பதிவு! கரூர் முதலிடம்! வாக்குச் சாவடிக்குள் காவலர்கள் நுழையக் கூடாது! தமிழக டிஜிபி உத்தரவு! எதிர்கட்சிகளின் மாற்றம் முழக்கம் வாக்கு எண்ணிக்கை முடிந்த பிறகே தெரியும்: அமைச்சர் துரைமுருகன் திமுக ஊடக ஒருங்கிணைப்பு அறையை பார்வையிட்டார் முதல்வர் ஸ்டாலின்!
/

விமானத்தில் பணிப்பெண்ணுடன் தகராறு: இந்து மகா சபா தலைவர் உள்ளிட்ட இருவர் கைது

கோவையிலிருந்து சென்னை புறப்படவிருந்த விமானத்தில், பணிப்பெண்ணுடன் தகராறில் ஈடுபட்டதாக இந்து மகாசபா தலைவர் உள்ளிட்ட மூன்று பேரை போலீஸார் இன்று அதிகாலை கைது செய்தனர்.

News image
Updated On :19 நவம்பர் 2015, 9:36 am

கோவையிலிருந்து சென்னை புறப்படவிருந்த விமானத்தில், பணிப்பெண்ணுடன் தகராறில் ஈடுபட்டதாக இந்து மகாசபா தலைவர் உள்ளிட்ட மூன்று பேரை போலீஸார் இன்று அதிகாலை கைது செய்தனர்.

இண்டிகோ விமானம் ஒன்று நேற்று இரவு 10 மணியளவில் கோவை விமான நிலையத்திலிருந்து சென்னைக்கு புறப்படவிருந்தது. அப்போது விமானத்தில் ஏறிய மூன்று பேர், விமானப் பணிப்பெண் ஒருவரை தனது மொபைல் போனில் படமெடுத்துள்ளனர். அதை அப்பெண் தட்டிக் கேட்டுள்ளார். அவருக்கு ஆதரவாக பிற பயணிகளும் அந்த மூவரையும் கண்டித்ததாக தெரிகிறது.

தகராறு முற்றவே, விமானி சம்பவம் குறித்து விமான நிலைய அதிகாரிகளுக்கு தகவல் அளித்தார். விரைந்து வந்த விமானப் பாதுகாப்பு படை வீரர்கள் அந்த மூவரையும், அங்கிருந்து அழைத்து சென்றனர்.

விசாரணையில் அவர்கள் பெருந்துறையைச் சேர்ந்த செந்தில்குமார், ராஜா மற்றும் திருச்சியைச் சேர்ந்த சுபாஷ் சுவாமிநாதன் என்றும் தெரியவந்தது. மூவரும் வழக்கறிஞர்களாக தொழில் செய்து வருகின்றனர். இதில் சுபாஷ் சுவாமிநாதன் அகிலபாரத இந்து மகா சபையின் தமிழகப் பிரிவின் துணைத் தலைவராக இருந்து வருகிறார்.

பின்னர் மூவரும் காவல் நிலையத்துக்கு அழைத்து செல்லப்பட்டு, இந்திய தண்டை சட்டம் 354 (தாக்குதல் அல்லது பெண்களிடம் தவறாக நடத்தல்) மற்றும் 268 (பொது வெளியில் தொல்லை) மற்றும் பணியிடங்களில் பெண்கள் மீது தவறாக நடத்தல் ஆகிய பிரிவுகளின் கீழ் கைது செய்யப்பட்டனர்.

இன்று காலை நகரின் ஆறாவது குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.