அமெரிக்காவின் இன்டியானா மாநிலத்தில் உள்ள ஒர்அருங்காட்சியம் தன் வசம் இருந்த 1000 ஆண்டு பழமையான, தமிழகத்திலிருந்து கடத்தப்பட்ட வெண்கலத்திலான சிவன் மற்றும் பார்வதி சிலைகளை போலீஸாரிடம் ஒப்படைத்துள்ளது.
இந்தியாவில் உள்ள பழங்கால கோயில்களிலிருந்து, பல கோடி மதிப்புள்ள சிலைகளை வெளிநாடுகளுக்கு கடத்தி, விற்பனை செய்தது தொடர்பாக பிரபல சிலை மன்னன் சுபாஷ் கபூர் கைது செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
அவர் கைது செய்யப்படுவதற்கு முன்பு அமெரிக்காவின் நியூயார்க் நகரில் 'ஆர்ட் ஆப் பாஸ்ட்' என்ற பழங்காலப் பொருள்கள், சிலைகள் விற்பனை நிலையத்தை நடத்தி வந்தார்.
அவரிடமிருந்து வாங்கப்பட்ட ஏராளமான திருட்டு சிலைகளை அமெரிக்க குடியேற்றம் மற்றும் சுங்க அமலாக்கத் துறையும், உள்நாட்டு பாதுகாப்பு புலனாய்வு அமைப்பும் பறிமுதல் செய்யும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளன.
இந்நிலையில், இன்டியானா மாகாணத்தில் உள்ள டேவிட் ஆவ்ஸ்லி அருங்காட்சியத்தில் இருந்த இரு சிலைகளை, அதன் நி்ர்வாகத்தினர் போலீஸாரிடம் ஒப்படைத்தனர்.
அவை, சோழர் காலத்தைச் சேர்ந்த (860-1279 கிமு) வெண்கலத்திலான சிவன் மற்றும் பார்வதி சிலைகளைகளாகும்.
இந்தியாவின் தமிழகத்திலிருந்து கடத்தல் மன்னன் கபூரால் கடத்தப்பட்ட இந்த சிலைகள் கடந்த 2004 ஆம் ஆண்டு அமெரிக்காவில் விற்பனை செய்யப்பட்டது தற்போது தெரியவந்துள்ளது.
அமெரிக்காவில் உள்ளவர்கள் இத்தகைய சாமி சிலைகளுக்கு வெகு மதிப்பளித்து, மிக அதிக விலைக்கு வாங்கி செல்வதால், இச்சிலைகளுக்கு அங்கு அதிக மதிப்புள்ளது.
கபூர் கைது செய்யப்பட்ட பின்பு, கடந்த 8 மாதங்களில் அமெரிக்காவில் உள்ள அருங்காட்சியகளிலிருந்து பல சிலைகள் மீட்கப்பட்டுள்ளன. கபூர் தற்போது சென்னையில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

தமிழ்நாடு பேரவைத் தேர்தல் 2026! வாக்குப்பதிவில் வரலாற்றுச் சாதனை! - நேரலை!

வெளிநாட்டு வாக்காளர்களை ஏன் வந்தாய் என்றா கேட்க முடியும்? வடிவேலு பேச்சு
15 ஆண்டுகளாக துரோகமிழைக்கும் திரிணமூல் காங்கிரஸ்: பிரதமர் மோடி

தொடர் தோல்வி எதிரொலி: செல்ஸி அணியின் பயிற்சியாளர் நீக்கம்!
வீடியோக்கள்

தவெக தலைவராக விஜய் செலுத்திய வாக்கு! | TVK Vijay |
தினமணி செய்திச் சேவை

பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு தொடக்கம்! | #Ajith | #EPS | #Seeman |
தினமணி செய்திச் சேவை

#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | போர்: பண்டியாவின் மும்பையா ருதுராஜின் சென்னையா? | MI vs CSK | MS Dhoni | Rohit Sharma |
தினமணி செய்திச் சேவை


