சென்னையில் வெள்ளம் வடிந்தது: 22 சுரங்க பாதைகள் போக்குவரத்துக்கு திறப்பு
சென்னை மாநகராட்சி பகுதியில் வெள்ளநீர் சூழ்ந்திருந்த 22 சுரங்க பாதைகள் சீரமைக்கப்பட்டு இன்று போக்குவரத்துக்கு திறந்துவிடப்பட்டன.


சென்னை மாநகராட்சி பகுதியில் வெள்ளநீர் சூழ்ந்திருந்த 22 சுரங்க பாதைகள் சீரமைக்கப்பட்டு இன்று முதல் போக்குவரத்துக்கு திறந்துவிடப்பட்டன.
கடந்த வாரம் கொட்டிதீர்த்த மழையால் சென்னை மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் பல இடங்களில் வெள்ள நீர் சூழ்ந்தது. மாநகரில் உள்ள சுரங்க பாதைகளில் நீர் தேங்கி போக்குவரத்து துண்டிக்கப்பட்டது.
இதையடுத்து சென்னை மாநகராட்சி நிர்வாகம் சார்பில் போர்கால நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு, பல்வேறு இடங்களில் தேங்கியிருந்த வெள்ளநீர் மோட்டார் மூலம் அகற்றப்பட்டது.
இதன்படி மாநகராட்சிக்குட்பட்ட 16 சுரங்க பாதைகளும், நெடுஞ்சாலைக்குட்பட்ட 6 சுரங்க பாதைகளிலும் இருந்த மழைநீர் அகற்றப்பட்டு இன்று போக்குவரத்துக்கு திறந்துவிடப்பட்டன.
அம்பத்தூர் சிட்கோ நகர் மற்றும் தெற்கு ஜெகன்நாத நகர் பகுதிகளில் கொரட்டூர் ஏரியிலிருந்து திறந்துவிடப்பட்ட உபரிநீர் சூழ்ந்தது. இங்கு மீட்பு பணிக்காக 7 படகுகள் ஈடுபடுத்தப்பட்டு, நிவாரணப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
மேலும், வேளச்சேரி ராம் நகரில் 49 தெருக்களில் தேங்கியிருந்த வெள்ளநீர் அகற்றப்பட்டு, மக்கள் இயல்பு நிலைக்கு திரும்பியுள்ளனர். இதேபோல, துரைப்பாக்கம் தலைமை செயலகம் காலனி, ஈஞ்சம்பாக்கம் பெத்தேல் நகர், காரப்பாக்கம் மற்றும் நீலாங்கரை பகுதிகளிலிருந்து வெள்ள நீரும் அகற்றப்பட்டன.
மாநகராட்சி சார்பில் 200 சிறப்பு மருத்துவமுகாம்கள் அமைக்கப்பட்டு, விஷக்காய்ச்சல் பரவாமல் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
அரசின் நிவாரணத் தொகையாக, சேதமடைந்த இரு கான்கீரிட் வீடுகளுக்கு தலா ரூ. 5,200ம், முழுமையாக சேதமடைந்த 7 குடிசைகளுக்கு தலா ரூ. 5000ம், பகுதியாக சேதமடைந்த 50 குடிசைகளுக்கு ரூ. 4100ம் வழங்கப்பட்டன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...