டி20 உலக கோப்பையில் இன்று... இந்திய அணியை 76 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி தென்னாப்பிரிக்கா அபாரம்!தயாரிப்பாளர் சங்கத் தேர்தலில் தலைவர் பதவிக்கு போட்டியிட்ட ஜி கே எம் தமிழ்குமரன் வெற்றிஆப்கானிஸ்தானில் பாகிஸ்தான் தாக்குதல்: இந்தியா கண்டனம்!சென்னை: முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால் சந்திப்புபாகிஸ்தானிடமிருந்து போர் விமானங்கள் கொள்முதல்: சோமாலியா பேச்சுவார்த்தை‘ஆபரேசன் த்ரஷி-1’: ஜம்மு - காஷ்மீரில் மேலும் ஒரு பயங்கரவாதியின் உடல் கண்டெடுப்பு! இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி புதன்கிழமை உரையாற்றுகிறார்ஏஐ மாநாட்டில் காங்கிரஸ் சட்டையின்றிப் போராட்டம்: “வெளிநாட்டு விருந்தினர்கள் முன் இந்தியாவுக்குத் தலைகுனிவு!” - பிரதமர் மோடி
/

மேற்கு தொடர்ச்சி மலையில் சூழல் சுற்றுலா மூலம் வாழ்வாதாரம் பெறும் மகளிர் வனக்குழுக்கள்

விருதுநகர் மாவட்ட மேற்கு தொடர்ச்சி மலை அடிவார கிராமங்களைச் சேர்ந்த சூழல் சுற்றுலா மூலும் மகளிர் மேலாண்மை குழுக்கள்  வாழ்வாதாரம் பெற்று வருவதோடு, வனப்பகுதிகளில்

News image
Updated On :9 ஜனவரி 2024, 5:37 am

எஸ். பாண்டியன்

விருதுநகர் மாவட்ட மேற்கு தொடர்ச்சி மலை அடிவார கிராமங்களைச் சேர்ந்த சூழல் சுற்றுலா மூலும் மகளிர் மேலாண்மை குழுக்கள்  வாழ்வாதாரம் பெற்று வருவதோடு, வனப்பகுதிகளில் சுற்றுப்புறச்சூழலையும் பாதுகாப்புடன் பராமரித்தும் பணியிலும் ஈடுபட்டு வருகின்றனர். 

விருதுநகர் மாவட்டத்தில் வத்திராயிருப்பு, ராஜபாளையம், ஸ்ரீவில்லிபுத்தூர், சேத்தூர், தேவதானம் ஆகிய பகுதிகளைச் சேர்ந்தவர்களுக்கு மேற்கு தொடர்ச்சி அடிவாரப்பகுதியில் தாணிப்பாறை, பிளவக்கல்அணை, கோவிலாறு, செண்பகத்தோப்பு மற்றும் சாஸ்தா கோயில் மலையடிவாரத்தில் விவசாயிகளுக்கு விளைநிலங்கள் உள்ளன. இப்பகுதி கிராமங்களைச் சேர்ந்தவர்கள் ஆடு, மாடுகள் மேய்ப்பதற்காகவும், மலைபொருள்களான குங்குலிங்கம், தேன், நெல்லிக்காய் உள்ளிட்டவைகளை நம்பியும் பிழைப்பு நடத்தி வருகின்றனர்.

இப்பகுதி அடர்ந்த வனப்பகுதியாக இருப்பதால் வனவிலங்குகளான சிறுத்தை, புலி, செந்நாய், காட்டெருமைகள், யானைகள், மான்கள், மிளா, சாம்பல் நிற அணில்கள் மற்றும் பல்வேறு பறவையினங்கள் உள்ளது. அவ்வப்போது இரைக்காகவும், தண்ணீர் தேடியும் விளை நிலங்களுக்குள் புகுந்து பயிரையும் சேதம் செய்து விடுகிறது. இதனால், விவசாயிகள் நஷ்டமடையும் சூழ்நிலையும் இருந்தது. அதைத்தொடர்ந்து வனவிலங்குகள் நடமாட்டம் உள்ள பகுதிகளில் தண்ணீர் தொட்டிகளும், ஆண்டுதோறும் இரை கிடைக்கும் வகையில் பலா, மகிழம் மரம், மலை இழந்தை, மூங்கில் உள்ளிட்ட மரக்கன்றுகளும் வைக்கப்பட்டுள்ளன. இதனால் வனவிலங்குகள் விளைநிலங்களுக்குள் புகுந்து பயிர்களை சேதம் செய்வதை கட்டுப்படுத்தப்பட்டுள்ளது.

இப்பகுதியை நம்பி பிழைப்பு நடத்தி வந்த கிராமங்கள் பயனடையும் வகையில் வனத்துறை மூலம் சூழல் சுற்றுலா மேலாண்மை மகளிர் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. தற்போது 280 மகளிர்கள் உறுப்பினர்களாக உள்ளனர். இவர்களுக்கு மேற்கு மலைத் தொடர்ச்சி அபிவிருத்தி திட்டத்தின் சார்பில் வனத்துறை மூலம் சூழல் சுற்றுலா செயல்படுத்தப்படுகிறது. மேலும், மலையேற்ற பாதை கற்களால் சீரமைக்கப்பட்டுள்ளது. மேலும், சூழல் சுற்றுலா மகளிர் மேலாண்மைக் குழுவின் உறுப்பினர்களுக்கு வழிகாட்டி மற்றும் மேலாண்மை பயிற்சியும் அளிக்கப்பட்டுள்ளது. அதோடு, இக்குழுக்களுக்கு சுற்றுலா வருகிறவர்களை அழைத்துச் செல்வதற்கு வாகனமும் வழங்கப்பட்டுள்ளது.

இம்மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் இருந்து சாஸ்தாகோயில் நீர் வீழ்ச்சியில் குளிப்பதற்காகவும், வனப்பகுதியைச் சுற்றி ஆராய்ச்சி செய்வதற்காகவும் கல்லூரி மாணவ, மாணவிகளும் வருகின்றனர். கோடைக்காலங்களில் ஒவ்வொரு நாளும் 500 பேர் முதல் 600 பேர்கள் வரையிலும், மற்ற நாள்களில் 100 முதல் 150 பேர்கள் வரையில் வந்து செல்கின்றனர். இவர்களிடம் இருந்து குளிப்பதற்கு கட்டணமாக தலா ரூ.30ம், நுழைவு வாயில் பகுதியில் இருந்து 3 கி.மீ தூராம் வனவிலங்குகள் தாக்காமல் பாதுகாப்புடன் கூடிய வாகனத்தில் அழைத்துச் செல்ல ரூ.10ம் வசூலிக்கப்படுகிறது.

அதேபோல், கற்களால் பாதை அமைக்கப்பட்டு மலையேற்ற பயிற்சிக்கு செல்கிறவர்களுக்கு தலா ரூ.250ம் கட்டணமாக வசூல் செய்யப்படுகிறது. இதன் மூலம் ஒருநாளைக்கு ரூ.25 ஆயிரம் முதல், குறைந்தது ரூ.15 ஆயிரம் வரையில் வருமானம் கிடைக்கிறது. இக்குழுக்கள் மேற்பார்வையில் வனப்பகுதியில் மதுக்குடித்தல், பிளாஸ்டிக் பைகள், புகைப்பிடித்தல், ரசாயன சோப்புகள் ஆகியவைகள் கொண்டு செல்வது கட்டுப்படுத்தப்பட்டு சுற்றுச் சூழல் பாதுகாப்பாக இருப்பதாகவும் வனத்துறை அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

இதுகுறித்து சாஸ்தா கோயில் சூழல் சுற்றுலா மேலாண்மை குழுவின் தலைவியும், தெற்கு தேவதானத்தைச் சேர்ந்த முன்னாள் ஊராட்சி மன்ற தலைவியுமான கே.முருகேஸ்வரி கூறியதாவது:

இத்திட்டம் தொடங்கப்பட்ட கடந்த ஒன்றரை ஆண்டுகளில் ரூ.9 லட்சம் வருவாய் கிடைத்துள்ளது. அதை வனத்துறை அதிகாரிகள் ஆலோசனையுடன் கிராம வனக்குழுவில் உள்ள உறுப்பினர்களுக்கு சொந்த தொழில் செய்வதற்கு 50 பைசா வட்டியில் கடன் அளிக்கப்பட்டுள்ளது. இதனால் இப்பகுதியில் கந்து வட்டி கொடுமை தடுக்கப்பட்டுள்ளது. இதிலிருந்து கிடைக்கும் வருவாய் மூலம் நுழைவு வாயில் பகுதியில் சுற்றுலா பயணிகள் அமர்ந்து செல்லும் வகையில் ஓய்வறை, குழந்தைகளுக்கான பூங்கா, உணவு விடுதியும் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. இப்பணியில் ஈடுபட்டுள்ள மகளிர் உறுப்பினர்களுக்கு ஒரு நாளைக்கு ரூ.250 வரையில் கூலி கிடைப்பதாகவும் அவர் தெரிவித்தார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.