காமராஜ் பொறியியல் கல்லூரி பேராசிரியருக்கு விருது
தகவல் தொழில்நுட்பம் துறை தொடர்பான தரமான ஆய்வு அறிக்கையை விரைவாக தேர்வு செய்தற்காக விருதுநகர் காமராஜ் பொறியியல் கல்லூரியின் இணைபேராசிரியருக்கு சிறந்த


தகவல் தொழில்நுட்பம் துறை தொடர்பான தரமான ஆய்வு அறிக்கையை விரைவாக தேர்வு செய்தற்காக விருதுநகர் காமராஜ் பொறியியல் கல்லூரியின் இணைபேராசிரியருக்கு சிறந்த மதிப்பீட்டாளர் என்ற சர்வதேச விருது வழங்கப்பட்டுள்ளது.
விருதுநகர் காமராஜ் பொறியியல் மற்றும் தொழில் நுட்பக் கல்லூரியில் மின்னனுவியல் மற்றும் தகவல் தொடர்பியல் துறையில் இணைப்பேராசிரியராக இரா.சுரேஷ்பாபு பணியாற்றி வருகிறார். தென்கொரிய நாட்டில் ஆய்வுக் கட்டுரை வெளியிடும் அமைப்பாக இ.டி.ஆர்.ஐ(எலக்ரானிக்ஸ் அண்டு டெலிகம்யூனிகேசன் இன்ஸ்டியூட் ஆப் ரிசர்ச்) விளங்கி வருகிறது. இந்நிறுவனத்திற்கு உலகெங்கும் சுமார் 900 மதிப்பீட்டாளர்கள் உள்ளனர்.
இவர்களில் தரமான ஆய்வு அறிக்கையை விரைவாக தேர்வு செய்வதற்காகவும் மற்றும் அர்ப்பணிப்பு உணர்வோடு இச்சேவை செய்வதற்காகவும் இ.டி.ஆர்.ஐ நிறுவனம் சுரேஷ் பாபுவை பாராட்டி விருது அளித்து கௌரவம் செய்துள்ளது. அவருக்கு இந்த விருதுடன் வெகுமதியாக ஆயிரம் டாலர் பணமும், வெள்ளிக் கேடயமும் வழங்கப்பட்டது. மேலும், அவருடைய புகைப்படத்தையும், கல்லூரியின் பெயரையும் இ.டி.ஆர்.ஐ நிறுவனம் அதன் வலைத்தளத்திலும் வெளியிட்டுள்ளது.
இந்த பெருமை விருதைப் பெறும் முதல் இந்தியர் என்பது மிகவும் சிறப்பு அம்சம் ஆகும். இந்த விருது பெற்ற இணைப்பேராசிரியருக்கு பாராட்டு விழா கல்லூரி வளாகத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது. இந்த விழாவிற்கு கல்லூரியின் தலைவர் பி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி தலைமை வகித்தார். முன்னாள் தலைவர் பி.கே.இன்பராஜன் முன்னிலை வகித்தார். இதில், உபதலைவர் பாலமுருகன், செயலாளர், பொறிஞர் சி.மாரிமுத்து, பொருளாளர் நவராஜன் மற்றும் முதல்வர் ஆனந்த்ஆச்சாரி மற்றும் நிர்வாகத்தினர் பொன்னாடை அணிவித்து பாராட்டினார்கள்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...