15 ஆண்டுகளாக துரோகமிழைக்கும் திரிணமூல் காங்கிரஸ்: பிரதமர் மோடிதமிழ்நாடு பேரவைத் தேர்தல் 2026! வாக்குப்பதிவில் வரலாற்றுச் சாதனை!திமுகவை விடுவிக்க விதை விதைக்கப்பட்டுள்ளது: அன்புமணிதமிழ்நாட்டில் வாக்குப்பதிவு முடிந்தது!15 ஆண்டுகளாக துரோகமிழைக்கும் திரிணமூல் காங்கிரஸ்: பிரதமர் மோடி
/

திருச்சியில் இந்திய கம்யூ. 13 இடங்களில் மறியல்:  459 பேர் கைது

நிலம் கையகச் சட்டத்தை கொண்டு வரும் மத்திய அரசைக் கண்டித்தும், இந்த முடிவை உடனடியாக திரும்ப பெறவேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி,

Updated On :14 மே 2015, 3:02 pm

நிலம் கையகச் சட்டத்தை கொண்டு வரும் மத்திய அரசைக் கண்டித்தும், இந்த முடிவை உடனடியாக திரும்ப பெறவேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, வியாழக்கிழமை திருச்சி மாநகர் மற்றும் புறநகர் பகுதியில் 13 இடங்களில் மறியலில் ஈடுபட்ட இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் 459 பேர் கைது செய்யப்பட்டனர்.

திருச்சி தெப்பக்குளம் அஞ்சல் நிலையம் முன்பு மாநகர மாவட்டச் செயலர் சுரேஷ் தலைமையில் மறியலில் ஈடுபட்ட 17 பெண்கள் உள்பட 52 பேரை கோட்டை போலீஸார் கைது செய்தனர்.

சோமரசம்பேட்டை...

மாநகர மாவட்ட துணைச் செயலர் பேரூர் நடராஜன் தலைமையில் சோமரசம்பேட்டை கடைவீதி முன்பு மறியலில் ஈடுபட்ட 24 பெண்கள் உள்பட 35 பேர் கைது செய்யப்பட்டனர்.

திருவெறும்பூர்...

திருச்சி-தஞ்சை தேசிய நெடுஞ்சாலையில் வட்டார குழு உறுப்பினர் பழனிவேல் தலைமையில் மறியலில் ஈடுபட்ட 50 பேரை திருவெறும்பூர் போலீஸôர் கைது செய்தனர்.

மணப்பாறை...

ஒன்றியச் செயலர் தங்கராசு தலைமையில்,மாவட்டச் செயலர் இந்திரஜித் முன்னிலையில் 108 பேரும், வளநாடு கைகாட்டியில், ஒன்றியச் செயலர் பாலு தலைமையில் 17 பேரும், வையம்பட்டியில், மாவட்ட ஊராட்சிக் குழு உறுப்பினர் ஜெயலட்சுமி தலைமையில் 29 பேரும் கைது கைதானர்கள்.

முசிறியில்.... கட்சியின் முசிறி ஒன்றிய செயலாளர் வி.பி. சண்முகம் தலைமையில் கைகாட்டியில் மறியலில் ஈடுபட்ட 5 பெண்கள் உட்பட 27 பேரை போலீஸார் கைது செய்து, மாலையில் விடுவித்தனர்.

லால்குடி...

வட்டாரக் குழு உறுப்பினர் பழனிமுருகன் தலைமையில் திருச்சி-சிதம்பரம் சாலையில் மறியல் ஈடுபட்ட 25 பேரை லால்குடி போலீஸார் கைது செய்தனர்.

துறையூர்....

ஒன்றியச் செயலர் செல்வம் தலைமையில் 24 பேரும், உப்பிலியபுரத்தில், ஒன்றியச் செயலர் ரவி தலைமையில் 20 பேரும் கைதானர்கள். புறநகர் பகுதியில் 12 இடங்களில் கைதான 407 பேரும், மாநகரில் கைதான 52 பேரும் மாலை விடுவிக்கப்பட்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.