15 ஆண்டுகளாக துரோகமிழைக்கும் திரிணமூல் காங்கிரஸ்: பிரதமர் மோடிதமிழ்நாடு பேரவைத் தேர்தல் 2026! வாக்குப்பதிவில் வரலாற்றுச் சாதனை!திமுகவை விடுவிக்க விதை விதைக்கப்பட்டுள்ளது: அன்புமணிதமிழ்நாட்டில் வாக்குப்பதிவு முடிந்தது!15 ஆண்டுகளாக துரோகமிழைக்கும் திரிணமூல் காங்கிரஸ்: பிரதமர் மோடி
/

விவசாயி உள்பட 3 பேரை அரிவாளால் வெட்டி திருட முயற்சி: ஒருவர் கைது

திருச்சி துவாக்குடி அருகே ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு வீட்டுக்குள் புகுந்து விவசாயி உள்பட 3 பேரை அரிவாளால் வெட்டி திருட முயன்ற இளைஞரை பொதுமக்கள் பிடித்து காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.

Updated On :13 ஜூலை 2015, 3:44 pm

திருச்சி துவாக்குடி அருகே ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு வீட்டுக்குள் புகுந்து விவசாயி உள்பட 3 பேரை அரிவாளால் வெட்டி திருட முயன்ற இளைஞரை பொதுமக்கள் பிடித்து காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.

துவாக்குடி, தேரடி தெருவை சேர்ந்தவர் தங்கமணி(48). விவசாயி. ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு குடும்பத்தினருடன் தூங்கிக்கொண்டிருந்தார். அப்போது வீட்டுக்குள் புகுந்த மர்ம நபர்கள் 3 பேர், உள்ளே இருந்த பொருள்களை திருட முயன்றனர். இதையறிந்த தங்கமணியும் அவரது மகன் சங்கரும் எழுந்து கூச்சலிட்டனர்.

இதனால் ஆத்திரமடைந்த மர்ம நபர்கள், தங்கமணியையும், சங்கரையும் அரிவாளால் வெட்டினர். சப்தம் கேட்டு ஓடிவந்த தங்கமணியின் சகோதர் கணேசனையும் அரிவாளால் வெடிவிட்டு தப்பி ஓடினர். இதையறிந்த பொதுமக்கள், தப்பியோடிய 3 பேரில் ஒருவரை மட்டுமே பிடித்தனர். பின்னர் அந்த நபரை மின்கம்பத்தில் கட்டி வைத்து தாக்கினார்கள்.

தகலவறிந்து சம்பவ இடத்துக்கு வந்த வந்த துவாக்குடி போலீஸôர்,பொதுமக்களிடமிருந்து அந்த நபரை மீட்டு காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்றனர். விசாரணையில் அவர் தஞ்சை மாவட்டம் பிள்ளையார் பட்டியை சேர்ந்த முனியாண்டி மகன் விஜி(எ) விஜயகுமார்(33) என்பதும், தப்பி ஓடியவர்களில் ஒருவர் மானோஜி பட்டியை சேர்ந்த மூர்த்தி என்பதும் தெரியவந்தது. மேலும் ஒரு நபர் யார் என்பதை அவர் சொல்ல மறுத்துவிட்டதாக கூறப்படுகிறது. இதையடுத்து விஜயகுமாரை,போலீஸôர் திருவெறும்பூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். மேலும் இது குறித்து வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.