திருச்சி முக்கொம்பு அருகே காவிரி ஆற்றில் ஞாயிற்றுக்கிழமை குளித்த தனியார் வங்கி மேலாளர் நீரில் மூழ்கினார். அவரை தீயணைப்பு வீரர்கள் தேடிவருகின்றனர்.
சமயபுரம் அருகேயுள்ள கொள்ளிடம் நெ.1 டோல்கேட் பகுதியைச் சேர்ந்தவர் நாராயணன் மகன் விஸ்வநாதன்(28). லால்குடியிலுள்ள கரூர் வைஸ்யா வங்கியில் மேலாளராக பணியாற்றி வந்தார். இவருக்கு திருமணமாகி 4 மாதங்களாகிறது. இந்நிலையில் ஞாயிற்றுக்கிழமை விடுமுறை என்பதால் இவரும், வங்கி உதவி மேலாளர் சக்திவேல், நண்பர்கள் ராஜ்குமார், பிரவீன் ஆகிய 4 பேரும் முக்கொம்பு சென்றனர். அங்கு பிற்பகல் சாப்பிட்டு விட்டு அங்குள்ள காவிரி ஆற்றில் குளிக்கச் சென்றனர். அங்கு ஆழம் தெரியாமல் ஆற்றில் இறங்கிய 4 பேரும் நீரில் மூழ்கினர்.
இதையறிந்த அப்பகுதியினர் ஆற்றில் இறங்கி, சக்திவேல்,ராஜ்குமார்,பிரவீன் ஆகிய 3 பேரை மட்டும் உயிருடன் மீட்டு திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து இது குறித்து ஜீயபுரம் போலீஸாருக்கும், திருச்சி தீயணைப்பு படையினருக்கும் தகவல் தெரிவித்தனர்.
இதையடுத்து சம்பவ இடத்துக்கு வந்த தீயணைப்பு படையினர் விஸ்வநாதனை தேடும் பணியில் ஈடுபட்டனர். ஆனால் மாலை வரை விஸ்வநாதன் கிடைக்கவில்லை. இதையடுத்து தீயணைப்பு படையினர் தேடும் பணியை நிறுத்திவிட்டு திங்கள்கிழமை மீண்டும் தேடும் பணியில் ஈடுபடபோவதாக தெரிவித்தனர். இது குறித்து ஜீயபுரம் போலீஸார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

மேற்கு வங்க முதற்கட்ட தேர்தலில் 91.78% வாக்குப்பதிவு!

தமிழகத்தில் 84.69% வாக்குப்பதிவு! ஆண்களைவிட பெண்களே அதிகம்!

மே.வங்கத்தில் வாக்குப்பதிவு நாளில் பிரதமர் மோடி சாலை வலம்!

இந்த வாரம் ஓடிடியில் வெளியாகும் படங்கள்!
வீடியோக்கள்

ஜனநாயகக் கடமையாற்றிய திரைப்பிரபலங்கள் | Tamil cine actors | TN Election 2026 |
தினமணி செய்திச் சேவை

தவெக தலைவராக விஜய் செலுத்திய வாக்கு! | TVK Vijay |
தினமணி செய்திச் சேவை

பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு தொடக்கம்! | #Ajith | #EPS | #Seeman |
தினமணி செய்திச் சேவை

#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை

