டி20 உலக கோப்பையில் இன்று... இந்திய அணியை 76 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி தென்னாப்பிரிக்கா அபாரம்!தயாரிப்பாளர் சங்கத் தேர்தலில் தலைவர் பதவிக்கு போட்டியிட்ட ஜி கே எம் தமிழ்குமரன் வெற்றிஆப்கானிஸ்தானில் பாகிஸ்தான் தாக்குதல்: இந்தியா கண்டனம்!சென்னை: முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால் சந்திப்புபாகிஸ்தானிடமிருந்து போர் விமானங்கள் கொள்முதல்: சோமாலியா பேச்சுவார்த்தை‘ஆபரேசன் த்ரஷி-1’: ஜம்மு - காஷ்மீரில் மேலும் ஒரு பயங்கரவாதியின் உடல் கண்டெடுப்பு! இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி புதன்கிழமை உரையாற்றுகிறார்ஏஐ மாநாட்டில் காங்கிரஸ் சட்டையின்றிப் போராட்டம்: “வெளிநாட்டு விருந்தினர்கள் முன் இந்தியாவுக்குத் தலைகுனிவு!” - பிரதமர் மோடி
/

அழகு நிலையத்துக்குள் பர்தா அணிந்து சென்று கத்திமுனையில் நகையை பறித்த மர்மநபர்

மதுரை நகரில் மக்கள் நடமாட்டம் மிகுந்த பகுதியில் அழகு நிலையத்துக்குள் பர்தா அணிந்துவந்த மர்மநபர் கத்தியைக் காட்டி பெண்ணிடம் தங்கநகைகளை

News image
Updated On :5 ஜனவரி 2024, 5:54 am

ஜெயப்பாண்டி

மதுரை நகரில் மக்கள் நடமாட்டம் மிகுந்த பகுதியில் அழகு நிலையத்துக்குள் பர்தா அணிந்துவந்த மர்மநபர் கத்தியைக் காட்டி பெண்ணிடம் தங்கநகைகளை பறித்துச்சென்றுள்ளார்.

 மதுரை அவனியாபுரம் பகுதியைச் சேர்ந்தவர் செüந்திரராஜன். இவரது மனைவி ஹேமா (36). இவர் மதுரை காமராஜர் சாலை முனிச்சாலை சந்திப்பு பகுதியில் அழகுநிலையம் வைத்துள்ளார்.

 புதன்கிழமை மாலையில் அவர் தனியாக இருந்தபோது, பர்தா அணிந்தநிலையில் மர்மநபர் வந்துள்ளார். உள்ளே நுழைந்த மர்மநபர் திடீரென கதவை மூடிவிட்டு கத்தியைக் காட்டி ஹேமா அணிந்திருந்த பதினொன்றரைப் பவுன் தங்கநகைகளை பறித்துள்ளார். பின்னர் ஷட்டரைப் பூட்டிவிட்டு தப்பியோடிவிட்டார்.

 செல்போன் மூலம் பக்கத்து கடைகாரர்களுக்கு ஹேமா தகவல் தெரிவித்தார். அதன் பின்னரே ஷட்டர் திறக்கப்பட்டு ஹேமா மீட்கப்பட்டார். மர்மநபர் தாக்கியதில் காயமடைந்த அவர் மருத்துவமனையில் சிகிச்சைக்குச் சேர்க்கப்பட்டார்.

 இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தெப்பக்குளம் போலீஸார் வழக்குப்பதிந்து விசாரித்துவருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.