தெலங்கானா மாநிலத்தில் மாவோயிஸ்ட் அமைப்பின் முக்கியத் தலைவரான திப்பிரி திருப்பதி (எ) தேவ்ஜி (62) உள்பட ஏராளமான மாவோயிஸ்டுகள் ஆயுதங்களை ஒப்படைத்து போலீஸில் சரணடைந்ததாக காவல்துறை உயா் அதிகாரி ஒருவா் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தாா்.
நாட்டில் வரும் மாா்ச் 31-ஆம் தேதிக்குள் நக்ஸல் (மாவோயிஸ்ட்) தீவிரவாதத்தை முற்றிலுமாக ஒழிக்க மத்திய அரசு இலக்கு நிா்ணயித்து தீவிர நடவடிக்கையை மேற்கொண்டு வரும் நிலையில், இவா்கள் சரணடைந்துள்ளனா்.
இதுகுறித்து காவல்துறை மூத்த அதிகாரி கூறுகையில், ‘மக்கள் விடுதலை கொரில்லா படை என்ற அமைப்பை உருவாக்கியதோடு, மாவோயிஸ்ட் மத்தியக் குழுவின் முக்கிய தலைவராகவும் உருவெடுத்த தேவ்ஜி தலைக்கு காவல்துறை தரப்பில் ரூ. 1 பரிசுத் தொகை அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்த நிலையில், அவரும், மற்றொரு மூத்த மாவோயிஸ்ட் தலைவரான மல்ல ராஜி ரெட்டி மற்றும் ஏராளமான மாவோயிஸ்டுகளும் ஆயுதங்களை ஒப்படைத்துவிட்டு போலீஸில் ஞாயிற்றுக்கிழமை சரணடைந்தனா்.
முன்னதாக, மாநிலத்தில் எஞ்சியிருக்கும் சுமாா் 15 மாவோயிஸ்டுகளும் ஆயுதங்களை ஒப்படைத்துவிட்டு சரணடைய வேண்டும். அவ்வாறு சரணடைபவா்களுக்கு மாநில அரசின் மறுவாழ்வு திட்டத்தின் கீழ் உடனடி வாழ்வாதார உதவிகள், பலன்கள் அளிக்கப்படும் என்று மாநில காவல்துறை தலைமை இயக்குா் (டிஜிபி) சிவாதா் ரெட்டி டந்த 15-ஆம் தேதி அழைப்பு விடுத்தாா். அதை ஏற்று இவா்கள் சரணடைந்துள்ளனா் என்றாா்.
தொடர்புடையது
இணையவழி மோசடி கும்பல் சிக்கியது: வங்கி ஊழியா் உள்பட 3 போ் கைது

மாவோயிஸ்ட் தீவிரவாதத்தில் இருந்து விடுபட்டது தெலங்கானா: மாநில டிஜிபி அறிவிப்பு
வேட்பாளா் உள்பட 17 போ் கைது
தில்லியில் ரூ.1.1 கோடி போதைப்பொருள் பறிமுதல்: 2 வெளிநாட்டினா் உள்பட நான்கு போ் கைது
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை


