தமிழக தேர்தல்: பிற்பகல் 1 மணி வரை 56.81% வாக்குப்பதிவு! எதிர்கட்சிகளின் மாற்றம் முழக்கம் வாக்கு எண்ணிக்கை முடிந்த பிறகே தெரியும்: அமைச்சர் துரைமுருகன் திமுக ஊடக ஒருங்கிணைப்பு அறையை பார்வையிட்டார் முதல்வர் ஸ்டாலின்!கோடை வெப்பம் காரணமா? 4 மணி நேரத்தில் 2 கோடி பேருக்கு மேல் வாக்களிப்பு!அனைவரும் வாக்களிக்க வேண்டும்: வாக்களித்த பின் ரஜினிகாந்த் வேண்டுகோள்!தமிழ்நாடு வெல்லும்: வாக்களித்த பின் முதல்வர் ஸ்டாலின்கோவை வாக்குச்சாவடியில் பாரம்பரிய உடையில் வாக்காளர்களை வரவேற்ற 'டினா' ரோபோ!அமைச்சர் அன்பில் மகேஸ் வாக்களித்தார்!மேற்கு வங்கத்தில் முதல் கட்டத் தேர்தல்! விறுவிறுப்பான வாக்குப்பதிவு
/

மனைவி நடத்தையில் சந்தேகம் கழுத்தை நெரித்து கொலை செய்த கணவன்

திருவாலங்காடு அருகே மனைவியின் நடத்தையில் சந்தேகம் ஏற்பட்டதால் ஆத்திமடைந்த கணவன் கழுத்தை நெரித்து கொலை செய்துவிட்டு திருத்தணி

Updated On :6 ஆகஸ்ட் 2014, 3:32 pm

திருவாலங்காடு அருகே மனைவியின் நடத்தையில் சந்தேகம் ஏற்பட்டதால் ஆத்திமடைந்த கணவன் கழுத்தை நெரித்து கொலை செய்துவிட்டு திருத்தணி நீதிமன்றத்தில் சரணடைந்தார்.

 திருவலாங்காடு அடுத்த சின்னமபேட்டை பகுதியில் வசித்து வந்தவர் உமாசங்கர்(28). இவரது மனைவி ஐஸ்வர்யா(23) இவர்களுக்கு திருமணம் முடிந்து 8 மாதங்கள் ஆகியுள்ளன. உமாசங்கர் மனைவியின் நடத்தையில் சந்தேகம் ஏற்பட்டது. இதனால் கணவன் மனைவிக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது.

 இந்நிலையில் செவ்வாய்கிழமை இரவு கணவன் மனைவிக்கும் இடையே வாய்தகராறு ஏற்பட்டது. ஆத்திமடைந்த உமாசங்கர் மனைவியை கழுத்தை நெரித்து கொலை செய்தார். பின்னர் புதன்கிழமை பிற்பகல் திருத்தணி நீதிமன்றத்தில் வழக்குரைஞருடன் சரணடைந்து கொலை செய்ததற்கான காரணத்தை நீதிமன்றதில் கூறினார்.

 தகவலறிந்த திருவாலங்காடு போலீசார் ஐஸ்வர்யாவின் சடலத்தை பிரதே பரிசோதனைக்காக திருவள்ளூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். மேலும் உமாசங்கரிடம் கொலை செய்ததற்கான காரணத்தை போலீசார் விசாரனை செய்து வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.