தமிழக தேர்தல்: பிற்பகல் 1 மணி வரை 56.81% வாக்குப்பதிவு! எதிர்கட்சிகளின் மாற்றம் முழக்கம் வாக்கு எண்ணிக்கை முடிந்த பிறகே தெரியும்: அமைச்சர் துரைமுருகன் திமுக ஊடக ஒருங்கிணைப்பு அறையை பார்வையிட்டார் முதல்வர் ஸ்டாலின்!கோடை வெப்பம் காரணமா? 4 மணி நேரத்தில் 2 கோடி பேருக்கு மேல் வாக்களிப்பு!அனைவரும் வாக்களிக்க வேண்டும்: வாக்களித்த பின் ரஜினிகாந்த் வேண்டுகோள்!தமிழ்நாடு வெல்லும்: வாக்களித்த பின் முதல்வர் ஸ்டாலின்கோவை வாக்குச்சாவடியில் பாரம்பரிய உடையில் வாக்காளர்களை வரவேற்ற 'டினா' ரோபோ!அமைச்சர் அன்பில் மகேஸ் வாக்களித்தார்!மேற்கு வங்கத்தில் முதல் கட்டத் தேர்தல்! விறுவிறுப்பான வாக்குப்பதிவு
/

இடியும் நிலையில் பள்ளிக் கட்டடங்கள்

கோவை மாநகராட்சியின் பல இடங்களில் துவக்கப் பள்ளிக் கட்டடங்கள் மிக மோசமாகப்

Updated On :30 டிசம்பர் 2012, 10:12 pm

கோவை மாநகராட்சியின் பல இடங்களில் துவக்கப் பள்ளிக் கட்டடங்கள் மிக மோசமாகப் பழுதடைந்துள்ளன. இக்கட்டடங்களை இடிப்பதற்கு கல்வித் துறையினர் பல ஆண்டுகளுக்கு முன் கோரிக்கை விடுத்தும் பொதுப்பணித்துறையினர் இதுவரை அனுமதி தரவில்லை.

அரசைப் பொறுத்தவரையில் ஏதாவது அசம்பாவிதம் நடந்து முடிந்தபின்தான் நடவடிக்கை எடுக்கப்படுகிறது. அந்த வகையில் கும்பகோணத்தில் பள்ளியில் ஏற்பட்ட தீ விபத்தில் 90-க்கும் மேற்பட்ட குழந்தைகள் கருகி உயிரிழந்த பின்தான் பள்ளியில் ஓலை மற்றும் ஓடு வேய்ந்த கட்டடங்கள் இருக்கக் கூடாது என அரசு உத்தரவிட்டது.

இதேபோல, பள்ளிப் பேருந்து மோதி பள்ளிக் குழந்தைகள் உயிரிழந்ததை அடுத்து பல்வேறு நிபந்தனைகள் விதிக்கப்பட்டன.

இந்நிலையில் கோவை மாநகராட்சிப் பகுதிக்கு உள்பட்ட குனியமுத்தூரில் உள்ள ஊராட்சி ஒன்றியத் துவக்கப் பள்ளியில் கட்டடங்கள் எப்போது வேண்டுமானாலும் இடிந்து விழும் நிலையில் உள்ளன. இக் கட்டடங்கள் பூட்டப்பட்டுள்ளன. ஆனாலும் பள்ளிக் கட்டடத்தின் மீது சாய்ந்துள்ள மரத்தின் மீது குழந்தைகள் மதிய நேரத்தில் விளையாடிக் கொண்டுதான் உள்ளனர்.

மரத்தின் மீது விளையாடும் குழந்தைகள் தவறி விழுந்தாலோ அல்லது விளையாடும்போது கட்டடம் இடிந்து விழுந்தாலோ பெரும் பாதிப்பு ஏற்படும் வாய்ப்பு உள்ளது.

இது தொடர்பாக உதவித் தொடக்கக் கல்வி அலுவலர் தன்னாசி கூறுகையில், பள்ளிக் கட்டடத்தை இடிப்பது தொடர்பாக ஊராட்சி ஒன்றிய ஆணையாளருக்குக் கடிதம் எழுதப்பட்டுள்ளது. இதுவரை கட்டடத்தை இடிப்பதற்கு எவ்வித அனுமதியும் தரவில்லை என்றார்.

உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளைப் பொருத்தவரையில் கடந்த 2008-ஆம் ஆண்டிலேயே சுமார் 40-க்கும் மேற்பட்ட பழுதான கட்டடங்களை இடிப்பதற்காக பொதுப்பணித்துறையின் கட்டடப் பிரிவுக்குப் பரிந்துரைக்கப்பட்டது. ஆனால் இன்று வரை ஒரு கட்டடத்தைக் கூட இடிப்பதற்கு பொதுப்பணித் துறையினர் முன்வரவில்லை.

இப்போதைக்கு கட்டடங்களுக்கு ஆபத்தில்லை. ஆனால் கடும் மழை பெய்தால் எந்த நேரமும் ஆபத்துக் காத்திருக்கிறது. ஆபத்துக்கு முன் கட்டடத்தை இடித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதுதான் பெற்றோர் மற்றும் பொதுமக்களின் எதிர்பார்ப்பு.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.