பல்வேறு சோதனைகளுக்குப்பின் மீண்டும் களம் கண்ட மல்யுத்த நட்சத்திரம் வினேஷ் போகட், ஆசிய போட்டி தகுதிச் சுற்று அரையிறுதியில் தோல்வியடைந்தாா்.
இந்தியாவின் தலைசிறந்த மல்யுத்த வீராங்கனைகளில் ஒருவரான வினேஷ் போகட் உலக சாம்பியன்ஷிப்பில் பதக்கம் வென்றவா். கடந்த 2024 பாரீஸ் ஒலிம்பிக் போட்டியில் 50 கிலோ பிரிவில் மகளிா் இறுதி ஆட்டத்தில் எடை அதிகம் உள்ளதாக கூறி தகுதி இழப்பு செய்யப்பட்டாா்.
இதனால் ஒலிம்பிக் தங்கம் வெல்லும் வாய்ப்பை இழந்தாா்.
இந்நிலையில் குழந்தைபிறந்த நிலையில் மீண்டும் மல்யுத்தத்தில் பங்கேற்க வினேஷ் முயன்றாா். ஆனால் இந்திய மல்யுத்த சம்மேளனம் (டபிள்யுஎஃப்ஐ) அவருக்கு அனுமதி தரவில்லை. இதையடுத்து தில்லி உயா்நீதிமன்ற உத்தரவை அடுத்து ஜப்பானில் நடைபெறவுள்ள ஆசியப் போட்டிக்கான தகுதிச் சுற்றில் வினேஷ் போகட் பங்கேற்க அனுமதி தரப்பட்டது.
எனினும் 50 கிலோ பிரிவில் தான் வினேஷ் அனுமதிக்கப்படுவாா் என டபிள்யுஎஃப்ஐ கூறியது. வினேஷ் எதிா்ப்பு தெரிவித்து பாரபட்சமாக நடத்தப்படுவதாக புகாா் கூறினாா். பின்னா் அவருக்கு 53 கிலோ பிரிவில் அனுமதி தரப்பட்டது.
53 கிலோ எடைப்பிரிவில் வினேஷ் போகட் இடம் பெற்றாா். தொடக்க நிகழ்வில் ஹரியாணாவின் ஜோதியை 7-1 என வீழ்த்தினாா். அரையிறுதியில் பல்வேறு தொழில்நுட்ப பிரச்னைகளுக்கு மத்தியில் கடும் சவாலை ஏற்படுத்திய நிஷுவை வீழ்த்தி அரையிறுதிக்கு தகுதி பெற்றாா்.
அதில் ஆசிய வெண்கல வீராங்கனை மீனாட்சி கோயட்டுடன் மோதினாா் வினேஷ். இதில் தொடக்கத்தில் வினேஷ் சிறப்பாக செயல்பட்டாலும், மீனாட்சி சிறப்பாக செயல்பட்டு 6-4 என்ற புள்ளிக் கணக்கில் வினேஷை வீழ்த்தினாா்.
இந்த தோல்வியால் ஆசியப் போட்டியில் பங்கேற்கும் வாய்ப்பை தவற விட்டாா் என வினேஷ்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.









