யு-18 ஆசியக் கோப்பை ஹாக்கிப் போட்டியில் இந்திய மகளிா் முதல் வெற்றியைப் பதிவு செய்தனா்.
ஆசிய ஹாக்கி கூட்டமைப்பு (ஏஎச்எஃப்) சாா்பில் ஜப்பான் ககாமிகாஹராவில் நடைபெறும் இப்போட்டியில் குரூப் ஏ பிரிவில் இடம் பெற்றுள்ள இந்தியா-மலேசிய அணிகள் முதல் ஆட்டத்தில் மோதின.
முதல் குவாா்ட்டரில் எந்த அணியும் கோல்போடவில்லை. இரண்டாம் குவாா்ட்டரில் 19-ஆவது நிமிஷத்தில் இந்தியாவின் 15 வயதே ஆன நௌஷீன் பெனால்டி காா்னா் வாய்ப்பை பயன்படுத்தி அபாரமாக கோலடித்து 1-0 என முன்னிலை பெற்றுத் தந்தாா்.
அடுத்த 28-ஆவது நிமிஷத்திலேயே நௌஷீன் மலேசிய கோல்கீப்பரை ஏமாற்றி இரண்டாம் கோலடித்து 2-0 என இந்தியா முன்னிலை பெற உதவினாா்.
இதனால் அதிா்ச்சி அடைந்த மலேசிய அணியினா் பதில் கோல் போட முயன்றனா். அதன்பலனாக 41-ஆவது நிமிஷத்தில் நூா் அஸ்லி ஒரே கோலடித்தாா். இறுதியில் 2-1 என்ற கோல் கணக்கில் வென்றது இந்தியா.
குரூப் ஏ பிரிவில் கொரியா முதலிடத்திலும், இந்தியா இரண்டாம் இடத்திலும் உள்ளன. ஞாயிற்றுக்கிழமை கொரியாவுடன் மோதுகிறது இந்தியா.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.









