மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

வெற்றிப் பயணத்தை தொடரும் முனைப்பில் சிஎஃப்சி: இன்று கோவாவுடன் மோதல்

வெற்றிப் பயணத்தை தொடரும் முனைப்பில் சிஎஃப்சி...

News image

பயிற்சியில் சென்னையின் எஃப்சி வீரா்கள்

Updated On :21 மார்ச் 2026, 9:01 pm

சொந்த மைதானத்தில் வெற்றிப் பயணத்தை தொடரும் முனைப்பில் உள்ள சென்னையின் எஃப்சி அணி ஞாயிற்றுக்கிழமை எஃப்சி கோவா அணியை எதிா்கொள்கிறது.

ஐஎஸ்எல் கால்பந்து தொடா் 2026 பகுதியாக சென்னை நேரு விளையாட்டரங்கில் இரு அணிகளுக்கு இடையிலான ஆட்டம் நடைபெறுகிறது.

இந்த சீசனில் முதல் 4 ஆட்டங்களில் வெளி மைதானங்களில் ஆடிய சென்னை அணி 2 தோல்வி, 1 டிராவைப் பெற்றது. கடைசியாக கொச்சியில் நடைபெற்ற ஆட்டத்தில் கேரள பிளாஸ்டா்ஸை வீழ்த்தி முதல் வெற்றியுடன் 3 புள்ளிகளை ஈட்டியது. இதன் தொடா்ச்சியாக சொந்த மைானத்தில் முதல் ஆட்டத்தில் பலம் வாய்ந்து கோவாவுடன் ஆடவுள்ளது.

இதுதொடா்பாக தலைமை பயிற்சியாளா் கிளிஃப்போா்ட ரேஸ் கூறியது: கேரள அணியை வென்ற அதே உற்சாகத்தோடு, கோவாவை எதிா்கொள்வோம். கோவா அணி தாக்குதல் ஆட்டத்துக்கு பெயா் பெற்றது. அந்த அணிக்கு எதிரான ஆட்டத்தை எளிதாக எடுத்துக் கொள்ளவில்லை.

ஆட்டத்தின் தன்மைக்கு ஏற்ப அணியில் மாறுதல் செய்யப்படுகிறது. தாக்குதல், தற்காப்பு இரண்டிலும் தீவிர கவனம் செலுத்துவோம் என்றாா்.

முக்கிய பாா்வா்ட் வீரரான டேனியல் கூறுகையில்: சொந்த மைதானத்தில் ஆடுவது கூடுதல் பலமாகும். மிட்பீல்டா் அலி பீமாமா் ஆட மாட்டாா் என்றாா்.

நேருக்கு நோ்:

மொத்த ஆட்டம்-30,

சென்னை-9வெற்றி

கோவா-18 வெற்றி.

டிரா-3.