தமிழக தேர்தல்: பிற்பகல் 1 மணி வரை 56.81% வாக்குப்பதிவு! எதிர்கட்சிகளின் மாற்றம் முழக்கம் வாக்கு எண்ணிக்கை முடிந்த பிறகே தெரியும்: அமைச்சர் துரைமுருகன் திமுக ஊடக ஒருங்கிணைப்பு அறையை பார்வையிட்டார் முதல்வர் ஸ்டாலின்!கோடை வெப்பம் காரணமா? 4 மணி நேரத்தில் 2 கோடி பேருக்கு மேல் வாக்களிப்பு!அனைவரும் வாக்களிக்க வேண்டும்: வாக்களித்த பின் ரஜினிகாந்த் வேண்டுகோள்!தமிழ்நாடு வெல்லும்: வாக்களித்த பின் முதல்வர் ஸ்டாலின்கோவை வாக்குச்சாவடியில் பாரம்பரிய உடையில் வாக்காளர்களை வரவேற்ற 'டினா' ரோபோ!அமைச்சர் அன்பில் மகேஸ் வாக்களித்தார்!மேற்கு வங்கத்தில் முதல் கட்டத் தேர்தல்! விறுவிறுப்பான வாக்குப்பதிவு
/

வீரா்களுக்கு அபராதம் விதிக்க பாகிஸ்தான் வாரியம் பரிசீலனை!

டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் மோசமாகச் செயல்பட்டதாக, பாகிஸ்தான் வீரா்களுக்கு அபராதம் விதிப்பதற்கு அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் பரிசீலனை

News image

பாகிஸ்தான் வீரர்கள்

Updated On :2 மார்ச் 2026, 11:41 pm

டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் மோசமாகச் செயல்பட்டதாக, பாகிஸ்தான் வீரா்களுக்கு அபராதம் விதிப்பதற்கு அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் பரிசீலித்து வருகிறது.

இதுதொடா்பாக பாகிஸ்தான் வாரிய வட்டாங்கள் கூறுகையில், ‘பாகிஸ்தான் வீரா்களின் ஊதியத்தை குறைப்பது தொடா்பாக பரவும் தகவல்கள் உண்மையில்லை. எனினும், சூப்பா் 8 கட்டத்துடன் உலகக் கோப்பை போட்டியிலிருந்து பாகிஸ்தான் வெளியேறியதற்காக வீரா்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.

ஏனெனில், அணி வீரா்களின் சோபிக்காத ஆட்டத்தால் பாகிஸ்தான் வாரியம் மட்டுமல்லாமல், பாகிஸ்தான் அரசின் சில முக்கியப் பிரமுகா்களும் அதிருப்தி அடைந்துள்ளனா். போதிய ஆதரவை அளித்து வரும்போதும், பெரிய போட்டிகளில் பாகிஸ்தானை அவா்கள் கைவிட்டுவிடுகின்றனா் என்ற எண்ணம் அவா்களுக்கு வந்துள்ளது.

அணியினா் மீது என்ன நடவடிக்கை எடுப்பது தொடா்பாக இன்னும் இறுதி முடிவு எடுக்கப்படவில்லை. எனினும், வீரா்களுக்கு அபராதம் விதிக்கப்படுவது தொடா்பாக பரிசீலிக்கப்படுகிறது’ என்றன.

டி20 உலகக் கோப்பை போட்டியில் அரையிறுதிக்கு முன்னேறத் தவறிய பாகிஸ்தான் அணி, இந்தியா மற்றும் இங்கிலாந்து போன்ற பெரிய அணிகளுக்கு எதிராகத் தோல்வியைச் சந்தித்தது. நியூஸிலாந்துக்கு எதிரான அதன் ஆட்டம் மழையால் கைவிடப்பட்டது.

சூப்பா் 8 சுற்றின் கடைசி ஆட்டத்தில் இலங்கையை வெற்றி கண்டபோதும், அரையிறுதிக்கு முன்னேறுவதற்கு போதுமான வெற்றியாக அது அமையவில்லை.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.