சினிமா ஆக்‌ஷன் பாணியில் போலீஸ் ராஜ்ஜியம்! அனிதா ராதாகிருஷ்ணன் கைதுக்கு மு.க. ஸ்டாலின் கண்டனம்அதிமுகவிலிருந்து விலகினார் வைகைச்செல்வன்!முதல்வர் விஜய் குறித்து அவதூறு பேச்சு: அனிதா ராதாகிருஷ்ணன் கைது!ஜூலை 10-ல் கரூர் செல்கிறார் முதல்வர் விஜய்!தமிழ்நாடு பட்ஜெட்: 2-ஆவது நாளாக முதல்வர் விஜய் இன்று ஆலோசனைஅமோனியா வாயுக் கசிவு: பலி எண்ணிக்கை 18-ஆக உயர்வுஅடுத்த வாரம் நியூஸிலாந்து செல்கிறார் பிரதமர் மோடி!தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,200 உயர்வு!டெலிகிராம், சிக்னலுக்கு மத்திய அரசு நோட்டீஸ்நீட், ஜேஇஇ அடிப்படையில் சோ்க்கை: பொதுத் தோ்வு மதிப்பெண்ணுக்கு 50% முக்கியத்துவம் அளிக்க பரிசீலனைசிறப்பு ‘டெட்’ தோ்வு நாளை தொடக்கம்ஜூன் மாதத்தில் யுபிஐ தளத்தில் 2,272 கோடி பரிவா்த்தனைகள்ஜூலை 20-இல் நீட் மறுதோ்வு முடிவுகள்சொத்து வரி வசூலிக்க இன்றுமுதல் சிறப்பு முகாம்பிரான்ஸில் தீவிரமடையும் காட்டுத் தீ: 2,200 ஏக்கா் நிலங்கள் எரிந்து சாம்பல்பெரு நிறுவன நிதி குறித்த 3 நாள்கள் கல்வி சாா் மாநாடு: சென்னை ஐஐடி-யில் இன்று தொடக்கம்அமா்நாத் புனித யாத்திரை இன்று தொடக்கம்: ஜம்முவில் இருந்து முதல் குழு புறப்பாடு
/

5/16: உலகக் கோப்பையில் இருந்து வெளியேறியது பனாமா!

கால்பந்து உலகக் கோப்பையில் இருந்து வெளியேறியது பனாமா குறித்து...

News image

தோல்விக்குப் பிறகு சோகத்தில் பனாமா வீரர். - படம்: ஏபி

Updated On :24 ஜூன் 2026, 8:35 pm IST

குரேசியாவுக்கு எதிரான போட்டியில் 0-1 என தோல்வியுற்றதால், கால்பந்து உலகக் கோப்பையில் இருந்து பனாமா அணி வெளியேறியிருக்கிறது.

கால்பந்து உலகக் கோப்பை ஜூன் 11 முதல் நடைபெற்று வருகிறது. மொத்தம் 48 அணிகள் பங்கேற்றுவரும் இதில் 32 அணிகள் நாக் அவுட் சுற்றுக்கு முன்னேற, 16 அணிகள் லீக் சுற்றுடன் வெளியேறுமென ஃபிஃபா போட்டிக்கான விதிகளை வகுத்துள்ளது.

கனடாவில் நடைபெற்ற லீக் சுற்றில் குரேசியா - பனாமா அணிகள் மோதின. இந்தப் போட்டியில் 54-ஆவது நிமிஷத்தில் குரோஷியாவின் ஆண்டே புடிமிர் கோல் அடித்தார்.

இறுதியில் குரோஷியா 1-0 என வென்று நாக் அவுட் சுற்றுக்கான வாய்ப்பை தக்கவைத்தது. மாறாக, பனாமா அந்த வாய்ப்பை இழந்து உலகக் கோப்பையில் இருந்து வெளியேறியது.

பனாமா தனது முதல் போட்டியில் கானாவுடன் தோல்வியுற்றது. இந்த குரூப்பில் இங்கிலாந்து, கானா, குரோஷியா அடுத்த சுற்றுக்கு முன்னேற வாய்ப்பிருக்கிறது.

முன்னதாக, இந்த உலகக் கோப்பையில் இருந்து துருக்கி (குரூப் டி), ஹைதி (குரூப் சி), துனிசியா (குரூப் எஃப்), ஜோர்டான் (குரூப் ஜே) ஆகிய நான்கு அணிகள் உலகக் கோப்பையில் இருந்து வெளியேறி இருந்தன. தற்போது, இதில் ஐந்தாவது அணியாக பனாமா (குரூப் எல்) இணைந்துள்ளது.

Summary

Panama Knocked Out of World Cup 2026 After 1-0 Loss to Croatia

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.